Friday, February 04, 2011

ரிசல்ட் வந்துடுச்சு

29,ஜனவரி சனி இரவு

நான்: டே, நாளைக்கு எண்ட்ரன்ஸ் இருக்கு, மறந்துறாத.

ரிஷி: எத்தனை மணிக்கும்மா.

நான்: காலையில ஒன்பதுக்குடா.

ரிஷி: சரி, சரி சண்டே வேற சரி சீக்கிரம்ம்மா எழுப்புங்கம்மா.கூட்டிட்டு போறேன்.

சண்டே காலை 8 AM

நான்: பத்திரம்டா.பாத்து வண்டி ஓட்டுடா.இந்தா இந்தா ஒரு டம்ளர் பாலாச்சும் குடிச்சுட்டு போங்கடா.

ரிஷி: சரிம்மா.

சண்டே காலை 11 AM

நான்: எண்ட்ரன்ஸ் எக்ஸாம் பற்றி எதுவும் கேட்கக் கூடாதுன்னு மனசுக்குள் நினைத்துக் கொண்டே என்னடா ரொம்ப கூட்டமா எக்ஸாமுக்கு.

ரிஷி: ம்.

நான்: எவ்ளோ பேருடா வந்தாங்க.

ரிஷி: 800 இல்லை 1000 பேர்மா.

நான்: ஓ, கிடைச்சுடும்மா.

ரிஷி: ம்.

நான்: ரிசல்ட் இன்னைக்கேவாடா.

ரிஷி: ம்.

நான்: நெட்லே தானே பார்க்கணும்.

ரிஷி: ம்.

மாலை 6 மணி.நெட் யூஸ் செய்துக் கொண்டிருந்த ரிஷியிடம்.

நான்: டேய் நெட்ல அந்த ரிசல்ட் வரும் சைட்டை ஓபன் செய்தாச்சாடா..1000 பேரும் ஓப்பன் செய்து ஹாங்க் ஆக போகுது.இப்பவே ஓபன் செய்திடு.

ரிஷி: ஹா.ஹா.ஹா.ஹா(சிரிக்கிறாராம்)..ம்.

நான்: வந்துருச்சா

ரிஷி: இல்லைம்மா.

நான்: அய்யோ பெயர் இல்லையா.

ரிஷி: ம்மா (நற.நற) இன்னும் ரிசல்ட் வரலை.

அதற்குள் ஒரு ஃபோன் எனக்கு என் தங்கையிடமிருந்து. இல்லை இன்னும் ரிசல்ட் வரலை ரிஷி பார்த்துட்டு இருக்கான் வந்ததும் சொல்றேன்.

இன்னொரு ஃபோன் கொடைக்கானல் போயிருந்த நகுலிடமிருந்து.இல்லைடா ரிசல்ட் வந்ததும் சொல்றேண்டா.

இன்னொரு ஃபோன் சித்தி பெண்ணிடமிருந்து இல்லைப்பா இன்னும் வரலை.

மணி: மாலை 7 ஆச்சு.

சரி அம்மு நான் கிளம்புறேன். ரிசல்ட் வந்தா பார்த்துட்டு ஃபோனில் சொல்லு என்று என் தம்பி தன் மகன்களை கூட்டிக் கொண்டு அவன் வீட்டிற்கு கிளம்பினான்.

மணி: 7.30

ரிஷி:  ரிசல்ட் வந்தாச்சும்மா. விஷால் பெயர் லிஸ்ட்டில் இருக்கு.பிப்ரவரி 17-ல் ஃப்ர்ஸ்ட் டெர்ம் ஃபீஸ் கட்டணுமாம்.

நான்: ஓ, சரி, சரி. கொள்ளைடா ஜூன் ஸ்கூலுக்கு இப்பவே ஃபீஸாடா. கலிகாலம்டா.ஒண்ணாப்புக்கு இப்படி எண்ட்ரன்ஸ் எக்சாம் வைச்சு.அதுலேயும் நாமும் சேர்க்கிறோமே.பேசாமா ஒரு ஸ்கூல் ஆரம்பிக்கலாம்டா.

ரிஷி: பாவம்ம்மா விஷால். ஆரம்பிச்சுடுச்சு ரோதணை.இன்னும் 12 வருடத்திற்கு ஒரே ஓட்டம் தான் அவனுக்கு.

ஃபோன் செய்து தங்கைகள்,மகனிடம் விஷால் ”ஒண்ணாப்பு” படிக்க செலக்ட் ஆனதை சொன்னேன்.

விஷால் என் தம்பி மகன் காலை 9 மணியிலிருந்து 10 வரை நடந்த ஒண்ணாப்பு எண்ட்ரன்ஸ் எக்ஸாமிற்கு என் மகன் ரிஷியுடன் போய் வந்தான். மற்ற பசங்க 10, 10.15க்கு எல்லாம் எக்ஸாம் முடித்து வெளியில் வர நம்ம தல 10.30 வரை எக்ஸாம் எழுதினாராம்.(ஒரு வேளை அவுட் ஆப் சிலபசில் கேள்வி வந்துச்சு போல.அதான் தல யோசிச்சு எழுதி இருக்கு) வந்து சொல்லும் போது ரிஷிக்கு ஒரே சிரிப்பு. என்னத்த தல எழுதுச்சோ தெரியலை.Maths 86, English - 88 எடுத்துள்ளார்.


விஷால் ஸ்கூலில் இருந்து வரும் போது மம்மி ஸ்கூலில், க்ரீம் பிஸ்கெட்டும்,பாலும் தந்தாங்கன்னு சந்தோஷமாய் சொன்னான்.அப்ளிகேஷன் ஆயிரம் ரூபாய்டா (என்னுடைய மைண்ட் வாய்ஸ் பிரியாணியே தரலாம்.)

கூலாய் விஷால்

இது எண்ட்ரன்ஸ் என்றோ, புது ஸ்கூலிற்கு போகப்போவது பற்றியோ அதுக்கு எதுவும் தெரியலை. ஜாலியா ரிஷிகூட வண்டியில் போக பிடித்து போய் வந்தான். நாங்களும் அன்றைய முழுநாள் சிரித்துக் கொண்டே இருந்தோம். அவனின் அம்மா மட்டும் கொஞ்சம் டென்ஷன் ஆஃப் இண்டியாவில். ஆனால்,பிள்ளைகளை இப்படி கஷ்டப்படுத்துகிறோமே என்று மனம் கஷ்ட பட்டது.அப்பப்ப நாங்கள் படித்த லட்சணங்களை பட்டியலிட்டு சிரித்துக் கொண்டிருந்தோம்.

28 comments:

MANO நாஞ்சில் மனோ said...

//,பிள்ளைகளை இப்படி கஷ்டப்படுத்துகிறோமே என்று மனம் கஷ்ட பட்டது.அப்பப்ப நாங்கள் படித்த லட்சணங்களை பட்டியலிட்டு சிரித்துக் கொண்டிருந்தோம்//

கஷ்டமாதான் இருக்கு வேறே என்ன செய்ய முடியும் சொல்லுங்க....

Vidhya Chandrasekaran said...

மைண்ட் வாய்ஸ் செம்ம:)

விஷாலிற்கு ஆல் தி பெஸ்ட்.

பாலா said...

வர வர பிள்ளைகளை ஒண்ணை வகுப்புக்கு சேர்ப்பாதே ஐஏஎஸ் எக்ஸாம் போல அவ்வளவு கடினமாகத்தான் இருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

விஷாலுக்கு வாழ்த்துகள்.

இப்போதெல்லாம் பள்ளியில் அட்மிஷன் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்து ரொம்பவே ஜாஸ்தி!

ராமலக்ஷ்மி said...

விஷாலுக்கு வாழ்த்துக்கள்:))!

ஸ்வர்ணரேக்கா said...

என்ன கொடுமை சார்..? ஒண்ணாப்பு அட்மிஷனுக்கு netல ரிசல்ட்.. !!!!

Nagasubramanian said...

ரொம்ப கஷ்டம்.

Thamira said...

அய்யோ.. கொடுமையே.! இப்படி ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோமே.. :-(

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் நாஞ்சில் மனோ.போட்டி அதிகம் ஆயிடுச்சே..

அமுதா கிருஷ்ணா said...

தாங்ஸ் வித்யா..

அமுதா கிருஷ்ணா said...

நன்றி பாலா..

நன்றி வெங்கட்நாகராஜ்.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி ராம்லெக்‌ஷ்மி

அமுதா கிருஷ்ணா said...

போட்டி ஸ்வர்ணரேக்கா..

நன்றி நாகசுப்ரமணியம்..

ஆமாம், பத்தாப்பு முடிக்கும் முன்னால் இரு லட்சமாவது செலவு செய்தாகணும் ஆதி.

சுசி said...

விஷாலுக்கு வாழ்த்துகள்.

செம சிரிப்புத்தான் போங்க.

பிரியாணி அப்டியே எங்களுக்கும் ஒரு பார்சல் அனுப்புற அளவுக்கு.. கொள்ளையே தான் :)

Ram said...

விஷால் குட்டி உனக்கு தமிழ் டெஸ்ட் இல்லையாப்பா.???

இங்கிலிபிஷ்ல 88.???

ஆக்சுவலி ஸ்பீக்கிங்.. மீ னோ இங்கிலிபீஷ்... யு ரைட் யு கெட்.. மீ ரைட் மீ நாட் கெட்.. யு ரைட் குட்.. மீ ரைட் பேட்..

ஒண்ணாப்புன்னு பெரிய படிப்பெல்லாம் படிக்கிறாங்க.. அப்பு எனக்கும் கொஞ்சம் இங்கிலிபிஸ் சொல்லிகொடுப்பா..

Chitra said...

He is smart! Nice photo.

ரிஷபன் said...

கலிகாலம்டா.ஒண்ணாப்புக்கு இப்படி எண்ட்ரன்ஸ் எக்சாம் வைச்சு.அதுலேயும் நாமும் சேர்க்கிறோமே.பேசாமா ஒரு ஸ்கூல் ஆரம்பிக்கலாம்டா.

செம கலாட்டா படிக்க படிக்க.
விஷாலுக்கு வாழ்த்துகள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஃபோன் செய்து தங்கைகள்,மகனிடம் விஷால் ”ஒண்ணாப்பு” படிக்க செலக்ட் ஆனதை சொன்னேன்.//

ஒன்னாப்புக்கே இப்படியிருக்கு, கலாட்டா!
பாவமில்லையா விஷால்?
பயப்படாதே, விஷால்!

கலக்கல், பதிவு!

Prabu M said...

உங்க மைண்ட் வாய்ஸ் எல்லாரோட வாய்ஸிலும் எதிரொலிக்கும்!
ரிஷியோட கமெண்ட் எதார்த்தம்!
குட்டிப்பையனுக்கு வாழ்த்துக்கள் (அந்த ஃபோட்டோ பிரமாதம்!)
ஆரம்பித்தில் பத்திரிக்கைகளில் கமெண்ட்டும் டாக் ஷோக்களில் விவாதமாக இருந்த விஷயம் இப்போது சாதாரண நடைமுறையாகிவிட்டது.... எல்கேஜி ஒன்றாம் வகுப்பு அட்மிஷன்கள் அலைக்கழிப்புகள்.. :(

ந‌ல்ல‌வேளை விஷாலுக்கு ம‌ட்டும் தேர்வு வைத்தார்க‌ள்... உங்க‌ த‌ம்பியிட‌ம் அலெக்ஸாண்ட‌ரின் குதிரை பெய‌ரைக் கேட்க‌வில்லையே! ("அபியும் நானும்"!)

ஹுஸைனம்மா said...

ம்ம்.. நானும் ரிஷிக்குத்தான் எண்ட்ரன்ஸுன்னு... சார் என்னா ஜாலியா படுத்து யோசிக்கிறார்!! “எண்ட்ரன்ஸ் இல்லா உலகைப் படைப்பது எப்படி?”னு யோசிக்கிறாரோ என்னவோ?!

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் சுசி குடும்பத்துடன் பிரியாணி சாப்பிடலாம்..

தம்பி கூர்மதியான் உங்களுக்கு டியூஷன் ஃபீஸ் 1000 ரூபாய் தான்( கொடுத்ததை எப்படி சம்பாதிப்பது)

அமுதா கிருஷ்ணா said...

தாங்ஸ் சித்ரா..

தாங்ஸ் ரிஷபன்,,

நிஜாமுதின் தல பயப்படாமல் இருக்கு.

பிரபு ரிஷியும் எக்ஸாமுக்கு ரெடியாக போய் இருந்தான்.

அமுதா கிருஷ்ணா said...

ஹூஸைனம்மா. அப்படிதான் யோசிக்கிறார் போல..

Pranavam Ravikumar said...

Very Difficult...! :-)))

ஆயிஷா said...

விஷாலுக்கு வாழ்த்துகள்.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி ரவிக்குமார்,ஆயிஷா,

Asiya Omar said...

அருமையான பகிர்வு,நல்ல காமெடியும் கூட..

இராஜராஜேஸ்வரி said...

என்ட்ரன்ஸ் சூப்பராய் செய்த விஷாலுக்கு வாழ்த்துக்கள்.
இன்னும் பன்னிரன்டு வருடம் ஓடணுமே!