Monday, February 21, 2011

உத்திரகோசமங்கை

புறப்படும் போதே நகுல் சொன்னான் இந்தியா மேப்பிலேயே இல்லாத ஊருக்கு அவ்வாவும், நீங்களும் கிளம்பிடுவீங்களே என்று. என் அம்மா பார்க்க ஆசைப்பட்ட அந்த கோயிலுக்கு போகணுமே என்று கிளம்பியாச்சு.

இந்த மாதம் 14-ல் மதுரையில் கார் எடுத்துக் கொண்டு காலை 7 மணிக்கு உத்திரகோசமங்கை கிளம்பினோம்.
மதுரை-திருபுவனம்-மானாமதுரை-பரமக்குடி-வழியாக இராமநாதபுரம் காலை 9.30க்கு போயாச்சு.அங்கு ஒரு ஆட்டோ ட்ரைவரிடம் உத்திரகோசை மங்கைக்கு எப்படி போகணும் என்று விசாரித்தால் அவர் ட்ரைவரிடம் ஏம்பா ராமநாதபுரம் வந்த? 20 கி.மீ திரும்பி போ விளக்கு ரோடு வழியே லெஃப்ட்டில் ரயில்வே லைன் க்ராஸ் செய்து 10 கி.மீ போகணும் என்று ரொம்ப அன்பா(!) வழி சொன்னார். சரியென்று வந்த வழியே திரும்பினோம். எனக்கு எதுக்கும் இன்னொரு ஆளிடம் கேட்கலாம் என்று தோன்றவே கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு ஆட்டோக்காரரிடம் கேட்க அவர் ராமநாதபுரத்திலிருந்து போகலாமே ஏன் திரும்பி போறீங்க இப்படியே கீழக்கரை ரோடுல ஒரு 8 கி.மீ போனீங்கன்னா திருப்புலானி வரும், அங்கிருந்து 8 கி.மீட்டரில் உத்திரகோசமங்கை வரும் என்று சொல்லவும் வண்டியினை திருப்பினோம்.


திருப்புலானியில் பெருமாளுக்கு ஹலோ சொல்லிட்டு உத்திரகோசமங்கை நோக்கி பயணம். நாங்கள் மட்டும் தான் போய் கொண்டிருந்தோம் அந்த ரோட்டில். ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மற்றும் யாரேனும் சைக்கிளில் போய் கொண்டு இருந்தார்கள். நடுவில் களரி என்று ஓர் ஊர் மட்டும் வந்தது. அதன் பிறகு உத்திரகோசமங்கை வந்தது. தனி தனி சன்னதிகள் மங்களநாதர்(லிங்கம்), மற்றும் மங்களேஷ்வரிக்கு. மரகத நடராஜருக்கு தனி சன்னதி. சிதம்பர கோயிலுக்கு முன்பே தோன்றியது. எனவே, ஆதி சிதம்பரம் என்கின்றனர். 

அம்மனுக்கு பிரணவம்(வேதம்) ரகசியமாய் உபதேசித்த இடமாம்.உத்திரம் எனில் உபதேசம்,ஓசம் எனில் ரகசியம்.மங்கைக்கு ரகசியமாய் உபதேசித்த இடமானதால் உத்திரகோசமங்கை எனப்பெயராம். ஈசன் உமையவளுக்கு மட்டும் ஆடி காட்டியதும் இங்கு தான். மாணிக்கவாசகர் இந்த ஸ்தலம் பற்றி 9 பாடல்கள் பாடி இருக்கிறார்.
.
                                          வெளி கோபுரம்


 பெரிய தெப்பகுளம். வருடம் முழுவதும் வற்றாத தண்ணீர் சிறிது உப்பாக இருந்தது.



          கோயில் கோபுரங்கள் இப்படி பளிச்சென்று இருந்தன.இது உள்ளே உள்ள கோபுரம்.                                                           



  போனவருடம் கும்பாஷேகம் நடந்துள்ளது. மார்கழி திருவாதிரை நாளில் இங்கு இருக்கும் மரகத நடராஜர் ஆருத்ர தரிசனம் மிகவும் ஃபேமஸ். அச்சமயம் இங்கு லட்சகணக்கில் மக்கள் வருவார்களாம். நாங்கள் போன போது நாங்கள் மட்டுமே.


வருடம் முழுவதும் சந்தனம் பூசப்பட்டு இருக்கும் நடராஜருக்கு மார்கழி திருவாதிரை அன்று மட்டும் சந்தனம் கழையப்பட்டு அபிஷேகம் நடக்கும். ஐந்தரை அடி உயரமுள்ள மரகத நடராஜர் சிரித்த முகமாய் இருந்தார்.எப்பவும் சந்தனம் பூசப்பட்டு இருந்ததால் தான் ஆங்கிலேயர்கள் அது மரகதம் என்று தெரியாமல் தங்கள் ஊருக்கு கடத்தாமல் இருந்தார்கள் போலும். இல்லையெனில் கோஹினூர் வைரம் போல் இப்போது லண்டன் மியூசியத்திற்கு இந்த சிலையும் பறந்து இருக்கும். உலகத்திலேயே பெரிய மரகத கல் இதுவாக தான் இருக்கும்.


இராவணன் மனைவி மண்டோதரி இங்கு வந்து வழிப்பட்டதாய் சொல்கிறார்கள்.3000 ஆண்டுகள் பழமையான இலந்த மரம் இங்கு .மரத்தின் அடி இப்படி உள்ளது. சகஸ்ரலிங்கத்திற்கு ஒரு சன்னதி.
                                           இலந்த மரம்



ஒரு மணிநேரம் அங்கு இருந்து விட்டு அங்கிருந்து இராமநாதபுரம் வராமல் 10 கி.மிட்டரில் இருக்கும் சத்திரக்குடி என்ற ஊரின் வழியே பரமகுடி வந்து மதுரை வந்தடைந்தோம்.வரும் வழியில் உப்பளங்கள் நிறைய இருந்தன. 


கோயில் வெளியில் இருந்த ஓர் போர்டு.



இதோ கோயிலுக்கு மேப் இருக்குடா என்று நக்கல் செய்யும் நகுலுக்காக எடுத்தேன் இந்த படத்தை.  


11 comments:

குறையொன்றுமில்லை. said...

ஆஹா, அருமை

Ram said...

அருமையான பதிவு.. இதுவரைக்கும் எனக்கு நினைவு தெரிஞ்சதிலிருந்து என் குடும்பத்தோட டூர் போனதே இல்ல.. அதனால எங்க வீட்ல என்ன நண்பர்கள் கூடவும் போக கூடாதுன்னு சொல்லிட்டிருந்தாங்க.. எப்போ நிருபரா சேந்தேனோ ஊர் ஊரா சுத்த ஆரம்பிச்சுட்டன்.. அதிக பொழுதுபோக்கு இடம் உள்ள அருகில் அருகில் இருக்கும் பிரபலமில்லாத ஊருக்கு குடும்பத்தோடு போக ஆசை.. பாப்போம்.. அமையுதான்னு..

Anonymous said...

விலக்கு ரோடு என்பது தான் சரி.

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன், இராமநாதபுரம் செல்லும் ரயில் வண்டிகள் விலக்கு ரோட் நிறுத்ததில் நின்று செல்வது வழக்கும்.

ராஜீவ் காந்தி ஒரு தடவை விசிட் செய்தார் என்பது கூடுதல் தகவல்.

சுசி said...

அருமையான தரிசனம் எனக்கும் :)

Anonymous said...

I also went to this place with my grand ma. I have seen 3 times arudhra dharsan in this temple. people say there is connection between this temple and ramanathapuram aranmanai. You could have gone via mudhukulathur also... when you come from madurai thats the shortest route.(I think but i am not sure.)

எண்ணங்கள் 13189034291840215795 said...

நாங்களும் இலவசமா சுத்தி பாத்தோம் உங்க புண்ணியத்துல.. படமும் தெளிவா , அழகா இருக்கு.

விட்டுக்கு வீடு நகுலன்கள்தான் போல.:)

Vidhya Chandrasekaran said...

படங்கள் நல்லாருக்கு சிஸ்டர்:)

Chitra said...

பகிர்வுக்கு நன்றிங்க... படங்களும் அருமை.

சாந்தி மாரியப்பன் said...

மேப்பை நான் சுட்டுக்கிட்டேன். பிற்காலத்துல வேணும்ல :-)))

வெங்கட் நாகராஜ் said...

கோவில் படங்களும் விளக்கங்களும் அருமை. பகிர்வுக்கு நன்றி. தமிழகத்திலேயே எத்தனை எத்தனை பழப்பெரும் கோவில்கள்! அத்தனையும் பார்க்க ஒரு பிறவி போதாது போலிருக்கிறது!

கோமதி அரசு said...

இந்தியா வரை படத்தில் உள்ள கோயிலைப் பார்த்து விட்டீர்கள்.

நாங்கள் திருவாதிரை அன்று போய் பார்த்தோம். சந்தனம் இல்லாமல் மரகத நடராஜர் தரிசனம் செய்தோம்.

அருமையாக உத்திரகோசமங்கை கோயிலைப்பற்றிய பதிவு கொடுத்ததற்கு நன்றி அமுதா.