Wednesday, February 16, 2011

நான் சாதித்தது(சும்மா ஒரு விளம்பரம் தான்)

விக்னேஷ் 10 ஆவது வகுப்பு 2009-ல் அவனின் ஊரில் ஒரு லூஸ் நடத்தும் ஸ்கூலில் படித்து வந்தான். 2008 டிசம்பர் மாதம் விக்னேஷுடன் சேர்த்து 20 மாணவர்களை டி.சி வாங்கி கொண்டு போகும் படி சொல்லியது பள்ளி நிர்வாகம். அனைவரும் one digit மார்க் எடுக்கும் கண்மணிகள். எனக்கு ஏனோ இந்த மாணவர்களை தான் மிகவும் பிடிக்கும்.

9 ஆவது படிக்கும் போது ஃபெயில் ஆக்கினால் அடுத்த வருட ஃபீஸ் வசூலிக்க முடியாது என்பதால் பெற்றோரிடம் என் மகனின் டிசியினை நான் விருப்பபட்டு வாங்கிக் கொள்கிறேன் என்று அந்த மாணவர்கள் 9 ஆவது படிக்கும் போதே கையெழுத்து வாங்கிக் கொண்டு விட்டார்கள். 10 ஆவது ஃபீஸினை மொத்தமாக வாங்கி கொண்டு பொது பரிட்சைக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் டிசி வாங்க சொல்லி வற்புறுத்தினார்கள். 2009 டிசம்பரில் விக்னேஷ் எனக்கு ஃபோன் செய்து என்னை ஸ்கூலிற்கு இனிமேல் வர வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று கூறவும் அடித்து பதறி நான் ஸ்கூலிற்கு சென்று அந்த லூஸை சந்தித்தேன். கலெக்டரை கூட உடனே சந்திக்க முடியும் போல. அந்த லூசினை நான் ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பிறகு சந்தித்தேன்.

விக்னேஷின் படிக்காத அம்மாவிடம் வாங்கி வைத்து இருந்த கடிதத்தினை என்னிடம் காண்பித்து டிசி வாங்கி கொண்டு செல்லுங்கள், அவனின் தாய் ஒத்துக் கொண்டதற்கு பிறகு நீங்கள் யார் என்று என்னை கேட்டார்கள். நான் தான் அவனுக்கு ஃபீஸ் கட்டுகிறேன் அந்த உரிமையில் கேட்கிறேன். அவனை இந்த மூன்று மாதத்தில் நான் படிக்க வைக்கிறேன்.ஸ்கூலில் வைத்து கொள்ளுங்கள் என்று கேட்டதற்கு முடியவே முடியாது என்று மறுக்கவும், தனி தேர்வர்கள் அப்ளை செய்வதற்கு 10 நாட்களே இருக்கும் நேரத்தில் என் குடும்பத்தினை விட்டு வேறு ஊரில் போய் இருந்து அந்த லூஸ்களிடம் போராட முடியாது என்ற நிலையில் வேறு வழியில்லாமல் டிசி வாங்கிக் கொண்டு அவனை 300 மார்க் வாங்க வைத்து காண்பிக்கிறேன் (என்ன என் தன்னம்பிக்கை) என்று சவால் விட்டு என் வீட்டிற்கு சென்னைக்கு கூட்டி வந்தேன். ஜனவரி 10-ல் என்னுடம் மவுனமாக வந்த அவனுக்கு அந்த வருட ஏப்ரல் 5-ல் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு.

சென்னை வந்த உடன் தமிழக அரசியல், ஜூனியர் விகடன் புத்தக அலுவலகத்திற்கு அந்த ஸ்கூல் பற்றி ஃபோனில் கூறினேன். அவர்களும் அந்த ஊர் நிருபர்கள் மூலமாய் ஒரு பக்கத்திற்கு அந்த ஸ்கூல் பற்றி அடுத்த மாதமே தங்கள் புத்தகத்தில் எழுதினார்கள்.எழுதி ஒரு வெங்காயமும் இல்லை. எதோ எனக்கு ஒரு திருப்தி.

அவனை திட்டாமல், கடிந்துக் கொள்ளாமல், ஒரேடியாய் படி படியென்று தொணத்தாமல், அவமானத்தால் பேசவே கூச்சப்பட்டு கொண்டிருந்த அவனை சிரிக்க வைத்து, நடு நடுவில் டிவி, சினிமா என பார்க்க வைத்து, கடைசி 20 நாட்கள் அவனின் ஊருக்கு கூடவே சென்று, எக்சாம் சமயம் கூடவே இருந்து, அவனை கூலாய் எக்சாம் எழுத வைத்து, அப்பாடி 248 மார்க் வாங்க வைத்தேன்.

இத்தனைக்கும் நான் பத்தாம் வகுப்பிற்கு ஆசிரியாராய் பணியாற்றியது இல்லை.எனக்கு அந்த சிலபஸ் புதிது. ஆனால் மிக எளிமையான அந்த ஸ்டெட் போர்ட் சிலபஸினை கூட பாஸ் செய்ய வைக்க முடியாமல் அந்த லூஸ்கள் எதற்கு ஸ்கூல் நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை.ஜெயில் வைத்து நடத்த தகுந்த நபர்கள்.அவன் ஸ்கூலில் இருந்த போது தினம் கீழே தான் உட்கார வேண்டுமாம்.பெரிய பிரம்பால் அடி அடிக்கடி வாங்கி இருக்கிறான். அவனே ஸ்கூலிற்கு வர மாட்டேன் என்று சொல்ல மாட்டானா என்னும் விதமாய் தினம் திட்டி இருக்கிறார்கள். 6 அடி உயரம் உள்ளவன் அவன். நான் பார்க்கும் போது அவமானத்தால் யாரிடமும் பேசுவதையே நிறுத்தி இருந்தான்.என்னிடம் சொல்ல வெட்க பட்டு கொண்டு அனைத்தையும் பொறுத்து உள்ளான்.நீ கட்டாயம் பாசாவே விக்கி என்று தினம் மந்திரம் ஓதி அவனை பாசாக வைத்தேன்.

ஊரில் படிக்க சென்ற கடைசி 20 நாட்கள் கூட டிசி வாங்கிய மற்ற மாணவர்களையும் அழைத்து வாடா படிக்கலாம் ஜஸ்ட் பாசாக்கலாம் என்றால் அந்த பசங்க வெட்க பட்டு கொண்டு படிக்க வரவில்லை.

என்னை மாதிரி திறமை(நிஜமா!!) உள்ள ஆசிரியர்களுக்கு இந்த அரசு ஆசிரியர் வேலை கொடுக்காமல் 20 வருடங்களாய் காக்க வைத்துள்ளது.தனியார் பள்ளிகளில் கொத்தடிமை வேலை பார்க்க பிடிக்காமல் என் திறமையினை வீணடித்து வருகிறேன்.


விக்னேஷின் அப்பா 12 வருடங்கள் முன்பு இறந்து விட்டார். அவர் என் கணவரின் தம்பி ஆவார். விக்னேஷ் இப்போது அரியர்ஸ் வைத்து இரண்டாவது வருடம் பாலிடெக்னிக் படித்து வருகிறான். ஒழுங்காய் டியூஷன் கிடைக்காமல் மேத்சில் அரியர்ஸ் வைத்துள்ளான்.அவன் அம்மாவிற்காக, கூட பிறந்த இரண்டு சகோதரிகளுக்காக எப்படியும் படிக்க வேண்டும் என்று வராத படிப்புடன் போராடிக் கொண்டு இருக்கிறான்.நிச்சயம் படிப்பான்,வேலைக்கு போவான் என்ற நம்பிக்கையுடன் நாங்களும் இருக்கிறோம். கஷ்டப்படுபவர்கள் எப்பவும் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட கடவுள் விடமாட்டார் என்ற நம்பிக்கையுடன். ஆனால் இந்த காலம் பணப்பேய்களான அந்த லூஸ்களுக்கான காலமாய் இருக்கிறது. அந்த ஸ்கூலில் படித்த காரணத்தால் சரளமாய் யாரிடமும் உரையாட முடியாமல் பயந்து போய் தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கிறான்.ஆனாலும், நம்பிக்கையுடன் இருக்கிறோம்



15 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தொடரட்டும் உங்கள் சாதனைகள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை வீதி தங்களை அன்போடு அழைக்கிறது..

Chitra said...

இந்த காலம் பணப்பேய்களான அந்த லூஸ்களுக்கான காலமாய் இருக்கிறது. அந்த ஸ்கூலில் படித்த காரணத்தால் சரளமாய் யாரிடமும் உரையாட முடியாமல் பயந்து போய் தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கிறான்.ஆனாலும், நம்பிக்கையுடன் இருக்கிறோம்



......கல்வியுடன், தன்னம்பிக்கையையும் வளர்ப்பது முக்கியமான விஷயம் அல்லவா? இறுதி வரிகளில், மனதை கனக்க வைத்து விட்டீர்கள். விக்னேஷ், எல்லா விதத்திலும் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையுடன் ப்ரார்த்தித்திக் கொள்கிறோம்.

Ram said...

நானும் இதுபோல் பாதிக்கபட்டிருந்தவன் தான்..

படிக்கணும்னு தோணும், ஒரு வெறி வரும் ஆனா புக்க எடுத்தா புஸ்னு போய்டும்.. ஒன்பதாவது படிக்கையில ஸ்கூல விட்டு வெளியேற சொன்னாங்க.. 10வதுல 1100க்கு 755 எடுத்தன்.. 12வதுல 1200க்கு 737 எடுத்தன்.. ஒவ்வொரு நிமிசமும் நான் சந்தோசமா இருந்த நொடிகள்ல நக்கல், கிண்டலா வீட்லயிருக்கிறவங்க கிட்ட பேசினாலும் படிக்கிறதுக்கு ஒண்ணுத்தையும் காணும், இதுல பேச்சுக்கு ஒண்ணும் குறச்சலில்லனு சொல்வாங்க.. அந்த நிமிசமெல்லாம் ரொம்ப கொடுமையானது..

பின்ன பிசிஏ எடுத்து காலேஜ்க்கு போய் உட்காரும் போது முதல் கேள்வி கம்ப்யூட்டர் சம்பந்தமா கேட்க மொத ஆளா பதில் சொன்னேன்.. நான் பேசறத பாத்த எங்க ராஜா சார் நீ ஒரு பாறை உன்ன செதுக்க தெரியாம செதுக்கியிருக்காங்க.. நீயொரு சிற்பமாக வேண்டியவன்னு சொன்னார்.. ஊக்குவிப்பான வார்த்தைய முதல் தடவ கேட்டுது இந்த காது.. அதுகப்பறம் காலேஜ் முடிவுல நான் யுனிவர்சிடி 4த்.. 82%டோட வெளிய வந்தன்..

ஊக்கமான வார்த்தைகள் போதும்.. ஒருவர் இன்னொருத்தர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை போதும் அவரை வெற்றியடைய செய்ய..

ஹுஸைனம்மா said...

வியப்பானது உங்கள் சேவை. விக்னேஷின் தன்னம்பிக்கை தொடரட்டும்.

ஒரு மாற்றுக் கருத்து: விக்னேஷிற்கு பாலிடெக்னிக் படிக்க சிரமம் என்பதை முன்பே கணித்திருப்பீர்கள். எனில், அவனுக்கு விருப்பமான, அதே சமயம், படிக்க எளிதான படிப்பில் சேர்த்திருக்கலாமே?

Vidhya Chandrasekaran said...

என்னத்த சொல்ல:((

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி செளந்தர்.

அமுதா கிருஷ்ணா said...

பிராத்தனைக்கு நன்றி சித்ரா.

அமுதா கிருஷ்ணா said...

அவமானம் பெரிய மனக்கவலையினை தரும் தம்பி கூர்மதியான்.அதிலிருந்து விக்னேஷ் மீறி வரவேண்டும்.உங்கள் கல்லூரி மார்க் சூப்பர்.

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் ஹூஸைனம்மா கஷ்டம் தான். இந்த படிப்பென்றால் மூன்று வருடம் படித்தால் போதும். கட்டாயம் வேலை வாங்கி விடலாம் என்றே பாலிடெக்னிக் படிக்கிறான்.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி வித்யா.

சாந்தி மாரியப்பன் said...

உங்க தன்னம்பிக்கைக்கும், விக்னேஷின் உழைப்புக்கும் கிடைச்ச பரிசுங்க இது. பாராட்டுகள்.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி அமைதிச்சாரல்

pichaikaaran said...

"நிச்சயம் படிப்பான்,வேலைக்கு போவான் என்ற நம்பிக்கையுடன் நாங்களும் இருக்கிறோம்."

வேலை பார்க்கும் ஆளாக இல்லாமல் , வேலை கொடுக்கும் ஆளாக உருவானாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை... வாழ்க்கை பல்வேறு ஆச்சரியங்ககளை கொண்டது

CS. Mohan Kumar said...

உங்கள் சேவையை பாராட்ட வேண்டும்.

ம்ம் இப்படியும் ஸ்கூல்கள் இருக்கே :(((