Thursday, December 23, 2010

சாவி யார் கிட்ட இருக்கு?

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு போய் இருக்கீங்களா? வெயில் நேரத்தில் போனால் கொஞ்சம் பரவாயில்லை.மழை நேரத்தில் என்னை மாதிரி மிக தைரியமானவர்கள் போகலாம். வெங்காயம் அங்காச்சும் கம்மி விலையில் கிடைக்காதா என்ற நப்பாசையில் தைரியமா போனேன்.

இனி கோயம்பேடு மார்க்கெட் பற்றி..

மொத்த ஏரியா: 275 ஏக்கர்.

மார்க்கெட் செயல்படும் ஏரியா: 60 ஏக்கர்.ஆசியாவிலேயே மிக பெரிய மார்க்கெட்.

மொத்தகடைகள்:3500.பூக்கடை,காய்கறிகடை,பழக்கடை

தினம் வருகை தருபவர்கள்:ஒரு லட்சம் பேர்.

வருகை தரும் லாரிகள்: 700

லாரிகள் உள்ளே வருவதற்கு கலெக்ட் செய்யப்படும் தொகை:4 கோடி(ஒரு வருடத்திற்கு)

ஒரு நாள் கழிவு :160 டன்.

திட்டம்: தினக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க 5.5 கோடியில் ஒரு மையம் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது மூடப்பட்டுள்ளது.

இப்பொழுது கழிவுகள் கொட்டப்படும் இடம்: மார்க்கெட் சுற்றி உள்ள இடமே.

பஸ்ல அல்லது கார்ல போகும் போது மார்க்கெட் வந்துடுச்சுன்னு எப்படி கண்டுபிடிப்பது:ஒரு மைலுக்கு முன்னாடியே மூக்கை பொத்திக் கொள்வீர்கள்.அப்படின்னா மார்க்கெட் நெருங்கிடுச்சுன்னு அர்த்தம்.

குப்பை போட்ட குற்றம் யார் மீது: சுத்தம் செய்யும் ராம்கே கம்பெனி சொல்லுது கடைக்காரர்கள் அவர்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியில் குப்பையினை போடுவதில்லை.அதில் தண்ணீர் பிடித்து வைக்க உபயோகிக்கிறார்கள்.கடைக்காரர்கள் சிலர் அந்த கேன்களை தங்கள் வீட்டிற்கு கொண்டு வைத்துக் கொண்டனர் என்றும் சொல்கிறது. சுத்தம் செய்ய தினம் ஒரு மூன்று மணிநேரமாவது மார்க்கெட் க்ளோஸ் செய்ய வேண்டும் என்றும் கேட்கிறார்கள்.

கொடுங்கையூர் குப்பை மேடு தினம் மாலை 5 மணிக்கு மூடிவிடுவதால் எங்களால் அங்கு கொட்டமுடிவதில்லை என்று கடைக்காரர்கள் சொல்கிறார்கள்.

எதிர்காலம்: 13 கி.மீ செயிண்ட்தாமஸ் மவுண்ட்- கோயம்பேடு மெட்ரோ ரயில் 2013-ல் முடிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.அதுவும் முடிந்தால் இன்னும் இன்னும் அதிக மக்கள் மார்க்கெட்டிற்கு போவார்கள். அதற்குள் மூடப்பட்ட அந்த திடக்கழிவு மின்சார மையத்தின் சாவி எங்கே இருக்கிறது என்று கண்டுப்பிடித்து திறக்க வேண்டும்.இல்லைனா ஆசியாவிலேயே அதிக நாற்றமடிக்கும் மார்க்கெட் என்று தான் பெயர் கிடைக்கும்.

ஒரு யூனிட் மின்சாரத்தினை ரூபாய் 4.50 கொடுத்து வாங்கிக் கொள்ள மின்சார துறை ரெடியாக இருக்கிறது.ஏன் அதிக பணம் போட்டு ஆரம்பித்த அந்த மையத்தினை இப்படி மூடி வைத்து மார்க்கெட்டினை நாற அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு வேளை அந்த மையத்தின் சாவி குப்பையில் காணாமோ போச்சோ???






               வெங்காயத்தை வாங்க போன நான் வெங்காயத்தை நல்லா பார்த்துட்டு வந்துட்டேன்.

10 comments:

vijay said...

nice & usefull article keep it up

வெங்கட் நாகராஜ் said...

ஹை வெங்காயம்! பார்த்தாலே பரவசமா இருக்கே! கோயம்பேடு மார்க்கெட் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

அதிசயமா வந்த பல நல்ல திட்டங்கள் இப்படித்தான் கிடப்பில இருக்கு!! நாமே பெருமூச்சு மட்டும் விட்டுக்க வேண்டியதுதான்.

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி விஜய்,வெங்கட் நாகராஜ்,ஹீசைனம்மா..

சாந்தி மாரியப்பன் said...

//ஒரு வேளை அந்த மையத்தின் சாவி குப்பையில் காணாமோ போச்சோ?//

இருக்கலாம் :-))

Vidhya Chandrasekaran said...

ஓரிரு முறை சென்றிருக்கிறேன். பழங்கள் வாங்க. ஹை ஜம்ப், லாங் ஜம்ப் எல்லாம் செய்ய வேண்டியிருந்தது..

ஆமினா said...

//வெங்காயத்தை வாங்க போன நான் வெங்காயத்தை நல்லா பார்த்துட்டு வந்துட்டேன்//

:))

நல்ல பதிவு

மனோ சாமிநாதன் said...

கோயம்பேடு மார்க்கெட் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி!!

கே. பி. ஜனா... said...

/வெங்காயத்தை வாங்க போன நான் வெங்காயத்தை நல்லா பார்த்துட்டு வந்துட்டேன்/
Very humourous!

Chitra said...

வெங்காயத்தை வாங்க போன நான் வெங்காயத்தை நல்லா பார்த்துட்டு வந்துட்டேன்.

.......அப்படி போடு அருவாளை!