Monday, November 29, 2010

பெண் மனதை சொல்லும் பாட்டு

பெண் மனதை பற்றி சொல்லும், பெண்களால் பாடப்பட்ட  10 பாடல்களை தேர்வு செய்ய சொல்லி சகோதரி ஆமினா கேட்டுக் கொண்டார். நன்றி ஆமினா. 







அன்பென்ற மழையிலே ---மின்சார கனவு
அனுராதா ஸ்ரீராம், ரஹ்மான்,வைரமுத்து.   
ன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே
 
 
இந்த பாட்டினை கேட்கும் போதெல்லாம் நம் வீட்டிற்கே ஏசுநாதர் வந்த மாதிரி, குட்டி கண்ணன்  வந்த மாதிரி ஒரு ஃபீலிங் வரும். வைரமுத்துவின் வார்த்தைகளில் அனுராதாவில் குரல் சூப்பர்.பெண்ணின் மனதில் இருக்கும் பக்தியினை அற்புதமாய் அனுராதா தன் குரலில் வெளிபடுத்தி இருப்பார். கொஞ்ச நேரம் கண்களை நாமாகவே மூடி விடுவோம்.

 என் வானிலே -- ஜானி
ஜென்சி, இளையராஜா,கண்ணதாசன்.. 

என் வானிலே ஒரே வெண்ணிலா..
காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்.
நீரோடை போலவே என் பெண்மை.
நீராட வந்ததே என் மெண்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா..
நீ தீட்டும் கோலங்கல் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்.
 
 
அட்டகாசமான ரஜினி, ஸ்ரீதேவி..இந்த பொண்ணு ஹிந்திக்கு போனதில் எனக்கு அப்படி ஒரு வருத்தம் உண்டு.ஜென்சியின் தேன் போன்ற குரல்.தன் காதலை மிக மெல்லியதாய் ஒரு பெண் வெளிபடுத்தும் அருமையான ஒர் பாடல். ரஜினி நிஜமாவே ஸ்ரீதேவியினை ரசித்து பார்ப்பார் நம்மைப் போலவே. பார்வை ஒன்றே போதும் வார்த்தை எதற்கு காதலுக்கு.

எதேதோ எண்ணம் வளர்த்தேன்--புன்னகை மன்னன். சித்ரா,இளையராஜா,வைரமுத்து.

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்
 
காதலிக்கும் பெண்ணின் மனநிலையினை அழகாக வார்த்தைகளில் சொல்லி இருப்பார் வைரமுத்து. சித்ராவின் அருமையான குரல்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
  
நானே நானா யாரோதானா--  
அழகே உன்னை ஆராதரிக்கிறேன்.
வாணி ஜெயராம், இளையராஜா, வாலி 
 

 காதல் என்று ஏமாந்து கொண்டிருக்கும் ஒரு பெண் பாடுவது. தான் விரும்பும் ஆணுக்காக குடித்து கொண்டே பாடும் பாடல். வாணி அருமையாக பாடி இருப்பார். பெண்கள் கூட குடிப்பாங்களா என்று இந்த படத்தினை பார்த்து சின்ன வயதில் ஆச்சரிய பட்டேன். லதா அருமையாக நடித்து இருப்பார். கெட்டவர்கள், நல்லவர்கள் என்று பெண்ணிற்கு பிரித்து பார்க்க தெரிவதில்லை என்பதற்கு இந்த பாடல் ஒரு எடுத்துக்காட்டு. 
  
 மலர்களே மலர்களே மலர வேண்டாம்..
புதுக்கோட்டையிலிருந்து சரவணன்.
  
பாம்பே ஜெயஸ்ரீ, யுவன் சங்கர் ராஜா,தாமரை

குழந்தையென மீண்டுமாறும் ஆசை
எல்லோர்க்கும் இருக்கிறதே
சிறந்த சில நொடிகள் - வாழ்ந்துவிட்டேன்
என்னுள்ளம் சொல்கிறதே
அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே
அட இங்கு பணிப்பெண்கள் யாருமில்லையே
இந்த விடுதலைக்கிணையின்று ஏதுமில்லையே
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி 

முகத்துக்கு ஒப்பனைகள் தேவையில்லயே
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே
அசடுகள் வழிந்தி்ட ஆண்கள் இல்லையே
காலம் நேரம் கடந்த 
ஞான நிலை..

 
எல்லோருக்கும் யாரும் இல்லாத ஒரு இடத்தில் மனம் போன போக்கில் நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு பெண்ணே எழுதி இருப்பதால் மிக அருமையாக உணர்ந்து எழுதப்பட்டிருக்கும் இந்த பாடலை ஜெயஸ்ரீ அருமையாக பாடி இருக்கிறார்.
பூவே பூச்சூடவா--பூவே பூச்சூடவா
சித்ரா, இளையராஜா,  வைரமுத்து. 
ந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

நான் என்னுடைய 5 வயது வரை நான் பாட்டியிடம் வளர்ந்தேன். என் தங்கை 5 வயதிலிருந்து 17 வயது வரை அவரிடம் வளர்ந்தார். அவரை அம்மா என்று தான் இருவரும் அழைப்போம். நான் நிறைய சேட்டை செய்துட்டு என் அம்மாவிடம் அடியும், திட்டும் வாங்கிட்டு தஞ்சம் அடைவது பாட்டியிடம் தான். நாங்கள் இருவரும் அவரின் இருபுறமும் படுத்துக் கொள்வோம். என்னை பார்த்து திரும்பி படு என்று இருவரும் அவரை படுத்தி வைப்போம். ஆனாலும் , முகம் கோணாமல் எங்கள் இருவரையும் சமாளிப்பார். ஒரு மத்தியான வேளையில் இருவரும் இரு பக்கம் படுத்து இருக்க எங்களுடன் பேசி கொண்டு இருந்தார்.தீடீரென்று மூச்சு விட சிரமப்பட்டு எங்கள் கண்முன்னாடியே அப்படியே இறந்தார்.இந்த படம் வந்த போது எங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவரும் உங்களை பற்றிய படம் என்று தான் எங்களிடம் கூறுவார்கள். எல்லார் மனதிலும் அம்மா மாதிரி பாட்டிக்கும் இடம் உண்டு.என் பாட்டி அவரின் 60 வயதில் இறந்தார்.  

லாலி லாலி லாலி லாலி-- ஸ்வாதி முத்யம்,  
சுசீலா,இளையராஜா, 

பெண் பாடும் தாலாட்டு.இந்த பாடலை தமிழில் கேட்பதை விட தெலுங்கில் மிக இனிமையாக இருக்கும். ஒவ்வொரு வரியிலும் லாலி லாலி என்று வருவது நல்லாயிருக்கும்.தமிழ் பாட்டில் அப்படி வராது. என் மகன் சிறியவனாக இருக்கும் போது நான் இந்த பாடலை பாடினால் ஓடி வந்து என் வாயை தன் இரு உள்ளங்கையால் மூடி விடுவான்!!!.ஆனாலும் சும்மா விடுவொமா நாம்.ராசவே உன்னை நம்பி முதல் மரியாதை   
ஜானகி,இளையராஜா, வைரமுத்து.  மிக அருமையான கிராமத்து பாடல். இந்த படம் வந்த போது தியேட்டரில் மூன்று முறை பார்த்தேன். தான் மதிப்பு வைத்துள்ள ஒரு மனிதருக்கு தன்னால் ஒரு பிரச்சனை என்ற போது வருத்தத்துடன் ஒரு பெண் பாடுவதாய் இப்பாடல்.


எழுதுகிறேன் ஒரு கடிதம்
கல்கி     சித்ரா, இளையராஜா, வெண்ணிலா காந்தி 
ஒரு பெண் பிறக்காத தன் பெண் குழந்தைக்காக பாடுவது போல் இந்த பாடல்.ஆனால், ஒவ்வொரு பெண்ணிற்கும் வேண்டிய போதனைகள் இருக்கும்.குழந்தை வரம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. கடவுளை இந்த விஷயத்தில் எனக்கு பிடிப்பதில்லை. கீதா அருமையாக நடித்து இருப்பார்.இந்த பாடலில் பெரிய இரு உள்ளங்கைகளுக்குள் இருக்கும் குழந்தை உள்ளங்கை ஃபோட்டோ ஆயிரம் கதை சொல்லும். ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி, உரிமைக்கு போரிட தேவையடி..சித்ராவின் ஆர்பாட்டமில்லா குரல்.        

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் வட்டத்திற்குள் சதுரம்   
சசிரேகா, ஜானகி..இளையராஜா, பஞ்சு அருணாச்சலம். 

பெண் நட்புகிற்காக பாடப்பட்ட பாடல். சசிரேகா, ஜானகி மிக அருமையாக பாடி உள்ளார்கள். சின்ன வயதில் இந்த பாடலை பார்க்கும் போது இந்திராவும், சுமதியும் வளர்ந்து சுமித்ரா, லதாவாக மாறுவது எனக்கு ரொம்ப பிடித்தது.டீனேஜில் நட்பு வரும் போது இந்த பாட்டில் வருவது போல் தான் நினைத்துக் கொள்கிறோம்.சில படங்களை நிஜம்னே நினைத்து சின்ன வயதில் பார்ப்பேன்.  கமல், ஸ்ரீதேவி நிஜமான கணவன், மனைவி என்று நினைத்து இருந்தேன்.எம்.ஜி.ஆர் மனைவிதான் பாட்டு பாடும் ஜானகி என்று நினைத்தேன். அப்பொழுது எல்லாம் ஜி.கே கம்மி, இப்பவும் கம்மி தான் என்கிறீர்களா? மிக கஷ்டமாகி போனது பிடித்த 10 பாடல்கள் மட்டும் செலக்ட் செய்ய சொன்னது. இருந்தாலும் செலக்ட் செய்து பதிவும் போட்டாச்சு.பெண்ணின்  மனதிலிருக்கும் பக்தி, காதலை வெளிப்படுத்தும் பாங்கு, காதலியின் மனநிலை, காதலிப்பதால் ஏற்படும் ஏமாற்றம், சுதந்திர மனபான்மை, தாய்மை, அன்பு, காதலிப்பவரிடம் வைத்துள்ள மதிப்பு, இன்னொரு பெண்ணுடன்  கொண்ட நட்பு என்று பெண் மனதை சொல்லியாச்சு. இது வரை இத்தொடரை எழுதாத பெண் பதிவர்கள் இத்தொடரை தொடரலாம்.

8 comments:

KANA VARO said...

பகிர்வுக்கு நன்றி

Starjan (ஸ்டார்ஜன்) said...

அனைத்தும் அருமையான பாடல்கள்.

ஆமினா said...

//பெண்ணின் மனதில் இருக்கும் பக்தியினை அற்புதமாய் அனுராதா தன் குரலில் வெளிபடுத்தி இருப்பார்.//

உண்மை தான். அந்த பாட்டுக்கு பலமே அனு குரல் தான்...

ஆமினா said...

//சித்ராவின் அருமையான குரல்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.//

ஆஹா...இந்த பாட்டு எப்படி நான் விட்டேன்!!! செம ரசனைங்க உங்களுக்கு

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி kana varo,ஸ்டார்ஜன்,

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் ஆமினா சித்ரா பாடினதில் எந்த பாட்டினை விடுவது.எதனை எடுப்பது..

மனோ சாமிநாதன் said...

எல்லா பாடல்களுமே அருமையான தேர்வுகள்!!

அமுதா கிருஷ்ணா said...

நன்றி் மனோ