Saturday, November 20, 2010

குzaரிஷ்..

புகழ் பெற்ற மேஜிக் நிபுணர் ஈதன்(ஹிரித்திக் ரோஷன்) ஒரு முறை மேஜிக் ஷோவின் போது எதிரி மேஜிக்காரரால் உயரத்திலிருந்து கீழே விழுந்து அடிப்பட்டு, முகத்தினை தவிர உடலின் அனைத்து பாகங்களும் இயங்காமல் 14 வருடங்களாய் படுத்த படுக்கை ஆகிறார். அவரை 12 வருடங்களாய் கவனித்துக் கொள்வது சோஃபியா.(ஐஸ்வர்யா ராய்).ரேடியோ ஜாக்கியாக ஈதன் தன் வீட்டிலிருந்தே ரேடியோவில் தன் நகைச்சுவை பேச்சினால் மக்களை கவர்ந்து வருகிறார்.

ஆனால், தேவயானி தத்தா என்ற வக்கீல் மூலம் ஈதன் தன்னை கொன்று விடுமாறு(மெர்சி கில்லிங்) கோர்ட்டில் மனு செய்கிறார். ஈத்னின் தாயாரும் இதற்கு சப்போர்ட் செய்கிறார்.இதற்கு நடுவில் ஓமர் என்ற இளைஞர் ஈதனிடம் மேஜிக் கத்துக் கொள்ள வருகிறார். ஒரு முறை ஈதனின் பழைய காதலியும் ஃபோனில் ஈதனுடன் பேசுகிறார்.

கோர்ட் ஈதனின் ரிக்வெஸ்ட்டை ஏற்றுக் கொண்டதா இல்லையா?? தெரியணுமா படத்தினை பார்க்கலாமே.

ரித்திக் ரோஷனுக்கு இப்ப அப்படியே அப்பா ராகேஷ் ரோஷன் ஜாடை தெரியுது.படத்தில் எல்லோரும் அருமையாக நடித்து உள்ளனர். இளம் மஞ்சள் நிறத்தில் அனைவரும் இருக்கிறார்கள். ஒரு வீட்டினுள் நடக்கிறது இந்த படம். உயரமான ஒரு மியூஸியம் மாதிரி இருக்கிறது வீடு.

ஒரு ராத்திரியில் மழைபெய்யும் போது ரித்திக் ரோஷனின் முகத்தில் சொட்டு சொட்டாக இரவு முழுவதும் கூரையிலிருந்து நீர் சொட்டுவதும், அவர் படும் அவஸ்த்தையும் டச்சிங்கா இருக்கு,

ஐஸ் ஹோட்டலில் ஆடும் ஊடி என்ற பாட்டிற்கு டான்ஸ் அசத்தல்.

ஒரு பெரிய ட்ரான்ஸ்பெரண்ட் பந்துடன் ரித்திக் ஆடும் ஒரு டான்ஸும் சூப்பர்.

நிஜமான தாடி வைத்துள்ளார் ரித்திக் ரோஷன்.கொஞ்சம் வளர்ந்த முடி.

ஐஸ்ஸின் ட்ரெஸ் வித்தியாசமாய் உள்ளது. ஒரு நீண்ட கவுன். அதன் மீது ஏப்ரான், நீண்ட கூந்தலில் ஒரு பெரிய மலர் சைடில் வைத்து வித்தியாச ஐஸ். எப்பவும் அடர்த்தியான சிவப்பான லிப்ஸ்டிக்.

லாயர் வெள்ளை காட்டன் சேலையில் முக்கால் கை ஜாக்கெட்டுடன் வளைய வருகிறார்.

படம் இந்தியாவில் நடப்பது போல் இருந்தாலும், உடைகள்,வீடு, மேஜிக் தியேட்டர் எல்லாம் அந்நியப்படுகின்றன.பழைய இங்கிலீஷ் படங்களில் வருவதனை போல் இருக்கின்றன.

ப்ளாக் என்ற அமிதாப் நடித்த படத்தினை டைரக்ட் செய்த சஞ்சய் லீலா பன்சாலி இந்த படத்தினை டைரக்ட் செய்து உள்ளார். ரொம்ப பொறுமைசாலி மனிதர் போல.

படம் கொஞ்சம் ஸ்லோ.ரித்திக், ஐஸ்ஸிற்கு பெயர் சொல்லும் படம்.

மிக அருமையான ஃபோட்டோகிராஃபி. ரித்திக் ரோஷனை நிறைய முறை பெரிய கண்ணாடியில் காண்பிக்கின்றனர்.

லொகேஷன்கள், செட்டுக்கள் அருமை.

5 comments:

ஹரிஸ் Harish said...

நல்ல விமர்சனம்...எனக்கு இந்தி தெரியாது...

ஆமினா said...

நானும் படத்தை பார்த்தேன். அருமை தான். ஆனாலும் இந்தியாவில் உள்ள கதை போல் தெரியவில்லை.காரணம் அவர்களின் உடை, கட்டடங்கள், நடனம்....

நல்ல விமர்சனம்!

ஆமினா said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். கீழே உள்ள லிங்கில் பார்க்க

http://kuttisuvarkkam.blogspot.com/2010/11/blog-post_23.html

அமுதா கிருஷ்ணா said...

நன்றி ஹரிஸ், ஆமினா..

Chitra said...

வித்தியாசமான கதையாய் இருக்கே.