Thursday, November 11, 2010

இந்தியா ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகுமா??

ஒபாமா தன் இந்திய வருகையின் போது இந்தியா ஐக்கிய நாட்டு சபையின் உள்ள பாதுகாப்பு (செக்யூரிட்டி கவுன்சில்)சபையின் நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவு தரப்போவதாக கூறி சென்று உள்ளார்.

ஐக்கிய நாட்டு சபையின் உறுப்பினர்கள் :191 நாடுகள்.

பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள் :15 நாடுகள்

நிரந்தர உறுப்பினர்கள் :அமெரிக்கா,சீனா, ரஷ்யா,
இங்கிலாந்து, ஃப்ரான்ஸ்

தற்காலிக உறுப்பினர்கள் :  ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை 10 நாடுகள் தற்காலிக உறுப்பினராகின்றன.

இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓட்டெடுப்பின் மூலம் பாதுகாப்பு சபையில் உறுப்பினர் பதிவியினை பெற்று வருகின்றன.

ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் ஒவ்வொரு நாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறது. இது வரை இந்தியா ஆறு முறை பாதுக்காப்பு சபையில் உறுப்பினராகி உள்ளது.1992க்கு பின் 19 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவிற்கு இப்பொழுது தற்காலிக உறுப்பினர் சான்ஸ் கிடைத்து உள்ளது.

ஜனவரி 2011 லிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா,கொலம்பியா, ஜெர்மனி, போர்ச்சுகல்,சவுத் ஆப்பிரிக்கா தற்காலிக உறுப்பினர் பதவியினை பொறுப்பு எடுக்க உள்ளன.2010 டிசம்பருடன் ஏற்கனவே தற்காலிக உறுப்பினர் பதிவியில் இருந்த 5 நாடுகளின் பதவி காலம் முடிவடைகிறது.

உலக நாடுகளின் அமைதியினையும், பாதுகாப்பையும் மேற்பார்வை இடுவது, எல்லை பிரச்சனைகளின் தலையிடுவது, பாதுகாப்பிற்கு படையினை அனுப்புவது தான் இந்த பாதுகாப்பு சபையின் வேலை ஆகும்.இந்த சபையின் தலைவர் ஒவ்வொரு மாதமும் அந்த சபையின் உறுப்பு நாடுகளின் ஆங்கில எழுத்து வரிசைப்படி பொறுப்பு எடுக்கின்றன.

எந்த திட்டம் நிறைவேற வேண்டுமானலும் 5 நிரந்தர உறுப்பின நாடுகளின் ஓட்டும் மற்றும் 4 தற்காலிக நாடுகளின் ஓட்டும் தேவை.மொத்தம் 9 நாடுகளின் ஓட்டு கிடைத்தால் தான் அந்த திட்டம் நிறைவேற்றப்படும். 5 நிரந்தர நாடுகளுக்கு மட்டும் எந்த ஒரு திட்டத்தினையும் நிறைவேற்றாமல் தடுக்கும் வீட்டோ பவர் உண்டு.பாதுகாப்பு சபையில் எடுக்கும் தீர்மானத்தினை நிராகரிக்கும் அதிகாரம் தான் வீட்டோ அதிகாரம் ஆகும்.

தற்சமயம் பிரேஸில்,ஜெர்மனி,இந்தியா,ஜப்பான்(G-4 நாடுகள்) நிரந்தர உறுப்பினர் ஆக முயற்சித்து வருகின்றன.ஆப்பிரிக்கா, அரேபியாவும் முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில் ஒபாமாவின் இந்த அறிக்கை இந்தியாவிற்கு நல்லதே.

இது வரை இல்லாத அளவில் இந்த முறை இந்தியா தற்காலிக உறுப்பினர் ஆவதற்கு அதிக ஓட்டுகளை பெற்று உள்ளது. 190 ஓட்டில் 187 நாடுகளின் ஓட்டினை பெற்று உள்ளது.இது ஒரு நல்ல அறிகுறி. நிரந்தர உறுப்பினர் ஆவதற்கும் இந்தியா அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இந்திய ஜனாதிபதி சீனா சென்று அதன் ஆதரவினை கேட்டு வந்துள்ளார். இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆகும் பட்சத்தில் பாகிஸ்தானின் தீவிரவாதத்தில் இருந்து மீளமுடியுமா, காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.

8 comments:

ஹரிஸ் Harish said...

இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை..

தமிழ் உதயம் said...

நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி ஹரிஸ்,,தமிழ் உதயம்

Anonymous said...

ஆகி என்னத்தைக் கிழிக்க. அழிவிற்கு வழி கோல இன்னொரு படி.

ஆமினா said...

நல்லது நடந்தா சரி தான்.

விரைவில் வரும் நாளுக்காக காத்திருப்போம்

Vidhya Chandrasekaran said...

ஆகும். பார்க்கலாம்..

sathishsangkavi.blogspot.com said...

நிறைய புதிய விசயங்கள்...

நிரந்திர உறுப்பினர் ஆகி என்ன செய்வது சீனாக்காரனுக நம்மை விட 20 மடங்கு வளர்ச்சி இருக்குதே...

ஐநா உறுப்னர் பதவியை விட பொருளாதார வளர்ச்சியை பார்க்கலாம்...

பொருளாதாரம் வளர்ச்சியில் முன்னேறும் போது பதவி தேடி வரும்...

எல் கே said...

கண்டிப்பா சீனா ஆதரவு வேண்டும். இல்லையேல் இப்படி ஒரு திட்டம் ஓட்டெடுப்பு வரும் சமயத்தில் தோற்கடிக்கப் பட வாய்ப்பு உண்டு