Monday, October 11, 2010

சனா பற்றி ஒரு வினா?

இன்றைய குட்டி பசங்களையும் ரஜினி ரசிகர்களாக்க எடுக்கப்பட்ட படம்,முன்னாள் ரசிகர்களை பற்றி கவலை படவில்லை.அவர்கள் எப்படி எடுத்தாலும் ரஜினியை ரசித்துக் கொண்டேயிருப்பார்கள் என்று முடிவு செய்து விட்டார்கள்.

படம் குப்பை என்றால் என் பசங்கள் இருவருக்கும் என் மீது கோபம் வருகிறது.போம்மா உனக்கு ரசிக்க தெரியவில்லை என்று என் ரசிப்புத்தனத்தின் மீதே சந்தேகம் வர செய்கிறார்கள்.விளம்பர உலகம்.விளம்பரத்தாலேயே ஒன்றும் இல்லாத ஒரு பொருளை எதோ இருப்பதாக பெரிதுப் படுத்தலாம்.

ஐஸ் கழுத்திற்கும் எதாவது ஆபரேஷன் செய்திருக்கலாம். நிறைய காட்சிகளில் கழுத்தில் வயது ஏறிவிட்டது என்பதற்கான கோடுகள் மூன்று தெரிந்துக் கொண்டே இருக்கிறது.அதை மறைக்க சிகிச்சை எதுவும் இல்லையோ.ரஜினி ஸ்கார்ஃப் மாதிரி ஒரு துணியால் கழுத்தினை மூடியே தான் பாடல் காட்சிகளில் வருகிறார்.

Erin Brocckvich படத்தில் ஜூலியா ராபட்ஸ், குழந்தையினை ஒரு கையில் தூக்கிக் கொண்டும் இன்னொரு கையில் இன்னொரு குழந்தையினை இழுத்துக் கொண்டும் படம் முழுவதும் அவ்வளவு அம்சமாக வளைய வருவார். நம் நடிகைகள் எப்போது அப்படியெல்லாம் வருவார்கள்.மரத்தினை சுற்றுவதை விட்டுட்டு.குழந்தைக்கு அம்மா என்றால் பார்க்க மாட்டோம் என்று இந்த டைரக்டர்கள் ஏன் தான் முடிவு செய்கிறார்களோ.


லொகேஷன்கள் அருமை..பெருங்குடி குப்பை மேடு அப்பா எவ்வளோ பெரிசு..பக்கத்து வீட்டில் காட்டுக்கத்தமாக பாட்டை வைக்கும் ராகவ்(சின்னத்திரை நடிகர்) ஓவர் ஆக்ட் செய்து இருக்கிறார்.ரிட்டயர்ட் ஆகும் அல்லது இறந்து போகும் ஆர்மி ஆஃபிசர்களின் குடும்பம் சராசரி மத்திய தர குடும்பத்தினை விட நன்றாகவே வாழ முடியும் பணப்பிரச்சனை இன்றி.இப்படி ஒரு ஹோம் எதற்கு என்று தெரியவில்லை.

சின்ன வயதில் என்னை போல என் தம்பிகளை போல சங்கரும் நிறைய காமிக்ஸ் படித்து உள்ளார். அதை விஷுவலாக்கி இருக்கிறார்.

சனாவாக வரும் ஐஸ்வர்யாவின் முழுப் பெயர் படத்தில் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

1.சஹானா
2.சஞ்சனா
3.சப்னா

நான் கேட்ட யாருக்கும் தெரியவில்லை. ஒரு க்ளூ காதல் ரத்து பேப்பரில் அந்த பெயர் எழுதி இருந்தது.(என்ன ஒரு கவனிப்பு!)

படத்தினை பார்க்க வேண்டாம் என்றால் யாரும் கேட்கப்போவதில்லை.

4 comments:

ஆதி மனிதன் said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமின்னு ஒவ்வொரு (ரோபோ) விமர்சனமா படிச்சுகிட்டு வந்தேன். ஒருத்தரும் ஒரு குறை கூட சொல்லல. அப்பத்தான் எனக்கு சந்தேகமே வந்தது. எல்லோரும் எதையோ மறைக்கிறாங்க/ஒரே மாதிரி முடிவு பண்ணி எழுதுறாங்கன்னு. இருந்தாலும் நீங்க கொஞ்சம் ஓபன் டைப் தான்.

நான் இன்னும் படம் பாக்கல. நானும் ஒரு (முன்னாள்) ரஜினி ரசிகன்னு சொன்னா நம்பவா போறீங்க. என்னோட ரஜினிலாம் ரிடையர் ஆகி பல வருஷம் ஆச்சு.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி ஆதிமனிதா..உண்மையை சொல்ல என்ன தயக்கம் வேண்டி இருக்கு..

ஸ்வர்ணரேக்கா said...

//படத்தினை பார்க்க வேண்டாம் என்றால் யாரும் கேட்கப்போவதில்லை. //

ஒரு வரியில் புரியவைத்து விட்டீர்கள்...

Vidhya Chandrasekaran said...

நான் ரெண்டு தடவப் பார்த்துட்டேனே:)