ஆகஸ்டு கடைசியில் ஒரு வாரம் கரூர் சென்று அப்படியே திண்டுக்கல்,கிருஷ்ண ஜெயந்தி அன்று பழனி போய்விட்டு சென்னை திரும்பினால் அடுத்த நாளே சொந்தத்தில் ஒருவர் தாத்தையங்கார் பேட்டையில் இறந்து விட அதற்கு அம்மாவை அழைத்துக் கொண்டு வைகையில் திருச்சி போய் அங்கிருந்து பஸ்ஸில் தா.பேட்டை போய் விட்டு திரும்ப வரும் போது காரில் நாமக்கல்,சேலம்,வேலூர், காஞ்சிபுரம் வழியாக தாம்பரம் வந்தால் அடுத்த நாள் என் தங்கை பெங்களூரூவில் 15 நாட்கள் ட்ரைனிங்கில் இருக்கிறேன் வாரக்கடைசியில் 3 நாட்கள் வந்தால் ஷாப்பிங் செய்துட்டு, கோயில் போகலாம் என்று அழைக்கவும் அப்படியே பஸ்ஸில் பெங்களூருக்கு விசிட், அங்கிருந்து சென்னை வந்த மறுநாள் விசாகப்பட்டினம் 5 நாட்கள், +2 படிக்கும் என் மச்சினர் மகள் டேக்கோண்டோ என்னும் விளையாட்டில்
இண்டர் நேஷனல் லெவலில் கலந்துக் கொள்ள திண்டுக்கலில் இருந்து வந்து இருந்தாள் அவளை தனியே அனுப்ப மனமில்லாமல் நானும் தமிழ்நாட்டில் இருந்து வந்த 18 பெண் குழந்தைகளுடன் சென்று வந்தேன். விசாகப்பட்டினத்தில் இருந்து திரும்பி வந்த இரண்டு நாளில் கனடாவில் இருந்து வந்திருக்கும் தோழி கெளரி துணைக்கு அழைத்தத்தால் ஃப்ளைட்டில் கொச்சின் சென்று கார் எடுத்து குருவாயூர்,திருச்சூர்,சாலக்குடி போய்விட்டு 30 ஆம் தேதி இரவு இனிதே ஃப்ளைட்டில் சென்னை திரும்ப வந்தேன்.
விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்மாசலம்..
மரோசரித்திரா,புதுபுது அர்த்தங்கள் படத்தில் வரும் கடல்..
வைசாக்கில் சப்மெரைன் மியூசியம், காளிக் கோயில்...
வைசாக்கில் நாங்கள் தங்கி இருந்த ஆந்திரா யுனிவர்சிட்டி ஹாஸ்டல்..
குருவாயூரில் புன்னத்தூர் என்ற இடத்தில் இருக்கும் யானைக் கோட்டையில் 65 யானைகள் உள்ளன.சித்தார்த் என்ற இந்த யானை குளிக்கும் அழகே அழகு.
யானையுடன் தைரியமாக நாங்கள்..
அத்திரப்பள்ளி அருவியில் மிதமான தண்ணீர்..
இப்படியே ஊர் சுற்றிக் கொண்டு இருந்ததால் ஒரு மாதமாக இணையத்தினை விட்டு பிரிய வேண்டியதாகி விட்டது. ஒரு மாதத்தில் கர்நாடகா,ஆந்திரா,கேரளா, அப்பப்ப தமிழ்நாடு என்று சுற்றியாச்சு. இந்த மாதம் எங்கேயும் ப்ளான் இல்லை!!!..
3 comments:
யானையுடன் தைரியமாக நாங்கள்..////
இலக்கணப் பிழை உள்ளது , இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ...........
"எங்களுடன் தைரியமாக யானை "
என்றல்லவா இருக்க வேண்டும் (ஹி.ஹி.ஹி.........மாட்னின்களா, மாட்னின்களா, மாட்னின்களா)
ஆமாம், மங்குனி தைரியமான யானைதான்..
//"எங்களுடன் தைரியமாக யானை "
என்றல்லவா இருக்க வேண்டும் //
ஹா..ஹா..ஹா...
அமுதா என்னப்பா ஒரு இடத்தையும் விட்டுவைக்கல போல! படங்கள் அனைத்தும் அருமை. ரசித்தேன்
Post a Comment