Friday, June 18, 2010

சொந்த கதை சந்தோஷ கதை...

முதல் முதலில் என் மகனை ஸ்கூலில் சேர்க்கும் போது அவன் அழுகவேயில்லை.3 வயது மகனை ஸ்கூலில் விட்டு வரும் போது நான் தான் கண்ணில் கண்ணீர் விழுந்துடுவேன் என்று இருந்தேன்.தெரிந்த தலைமை ஆசிரியை போங்க அமுதா நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று என் முதுகில் தட்டி அனுப்பினார். ஒரே அழுகாச்சியாய் வந்தது. அவன் சமத்தாய் ஸ்கூல் போய் வந்தான். 12 மணிக்கு வீட்டிற்கு வந்ததும் தினம் ஸ்கூலில் நடந்தது அனைத்தையும் என்னிடம் ஒப்பித்து விட்டு தான் மதியம் சாப்பிடவே செய்வான்.

எனக்கு அவனை இஞ்சினியரிங் சேர்க்க ஆசை.உன் ஆசைக்கு நீ தான் படித்து இருக்க வேண்டும் என்று அவனின் அப்பா சொல்லி விட்டார். அவன் விரும்பி காமர்ஸ் குரூப் எடுத்தான்.அவன் அப்பாவுடன் வேலை பார்த்த 14 பேரின் பிள்ளைகள் அப்போது +2 முடித்தார்கள். இவனை தவிர 12 பேர் சேர்ந்தது இஞ்சினியரிங் ஒரு பெண் சேர்ந்தது மருத்துவம். இவன் மட்டுமே அவன் விரும்பிய சென்னை கிருத்துவ கல்லூரியில் பி.காம் சேர்ந்தான். நான் தான் காலேஜுக்கும் அட்மிஷனுக்கு போனேன். அப்ப அழுகாச்சி எல்லாம் வரவில்லை.

எப்பவும் கல கலவென்று இருக்கும் என் பையனிடம் இரண்டு கண்டிஷன் மட்டும் போட்டேன். காலெஜில் கட்டாயம் 70% மார்க் எடுக்கணும், லவ் வேணா பண்ணிக்கோ ஆனால் வேறு மதம் வேண்டாம். மதம் மாறுவது என்பது அம்மாவை மாற்றுவது மாதிரி எனக்கு தோணும். இதற்கு நீ லவ் செய்ய அனுமதியே தந்திருக்கவே வேண்டாம் என்றான்.வீட்டிற்கு வந்ததும் காலேஜ் கதை எல்ல்லாம் சொல்லி விடுவான்.கட் அடிச்சுட்டு சினிமா போனால் கூட என்னிடம் ஃபோனில் சொல்லிட்டு தான் போவான்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் காலேஜ் கேம்பஸ் இண்டர்வூயூவில் 3 கம்பெனிகளில் செலக்ட் ஆகி இங்கி பிங்கி பாங்கி போட்டு இப்ப நோக்கியாவில் சேர்ந்து உள்ளான். ஸ்கூல் மற்றும் காலேஜ் சேரும் போது என்னை கூட்டி போன படுவா இப்ப ஆஃபிசிக்கு என்னை கூட்டிப் போகவே இல்லை.

காலேஜில் நான் கேட்ட மார்க்கிற்கும் அதிகமாக வாங்கி விட்டான். +1 -ல் காமர்ஸ் சேருகிறாயே நல்லா படிக்கிறவன் ஏண்டா இப்படி செய்ற என்ற போது என்னை பார்த்து நிறைய பேர் காமர்ஸ் படிக்க வரும் அளவிற்கு முன்னேறி காட்டுறேன் என்று கூறி விட்டான். ஒரு நாளும் காலையில் 6 மணிக்கு முன்னாடி, இரவு 10 மணிக்கு பின்னாடி இந்த உலகம் எப்படி இருக்கும் என்று அவனுக்கு தெரியாது. முழிச்சு இருக்கும் நேரம் படித்தால் போதும் என்பது அவன் சித்தாந்தம்.நாட்கள் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.இப்ப தான் ஸ்கூலில் சேர்த்துவிட்டு வந்தது போல் இருக்கிறது.

2 comments:

எல் கே said...

//உன் ஆசைக்கு நீ தான் படித்து இருக்க வேண்டும் என்று அவனின் அப்பா சொல்லி விட்டார். //

சரிதான்.
//. முழிச்சு இருக்கும் நேரம் படித்தால் போதும் என்பது அவன் சித்தாந்தம்.//

ஹாய் பாஸ் நம்ம கட்சி .

//.கட் அடிச்சுட்டு சினிமா போனால் கூட என்னிடம் ஃபோனில் சொல்லிட்டு தான் போவான். //

நல்ல மகன்

உங்கள் மகனுக்கு எங்கள் வாழ்த்துக்கள் அமுத மேடம்

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துகள் உங்கள் மகனுக்கு. எங்காளு என்ன பண்றாருன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.