Wednesday, June 16, 2010

யோச்சி யோகாய்...

இரண்டாம் உலகப்போரின் போது 1944ல் அமெரிக்க படைகள் பசிபிக்கடலில் இருக்கும் தங்களுக்கு சொந்தமான குவாம் தீவினை ஜப்பானிடமிருந்து கைப்பற்றியது. அப்போது ஜப்பான் நாட்டினை சேர்ந்த நிறைய வீரர்கள் குவாம் தீவின் அடர்ந்த காடுகளில் மறைந்து கொண்டனர். இரண்டாம் உலகப்போரும் முடிவிற்கு வந்தது.

1972-ல் ஒரு விசித்திர மனிதனை குவாம் தீவின் டெலஃபோஃபோ என்ற கிராமத்தினை சேர்ந்த இருவர் நதிக் கரையோரமாக பிடித்து போலீசில் கொடுத்த போது அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். யோச்சியோகாய் என்ற அந்த ஜப்பானியர் 1944-ல் காட்டில் அமெரிக்க படைகளுக்கு பயந்து ஒளிந்துக் கொண்டவர் என்று தெரிய வந்தது.28 வருடங்கள் காட்டில் வாழ்ந்து உள்ளார். 18 வருடங்களாய் இவருடன் இன்னும் இரண்டு வீரர்களும் வாழ்ந்து உள்ளனர்.ஒவ்வருவராக இறந்து விட்டனர்.பசியால் அவர்கள் இறந்து இருக்கக்கூடும் என்று தெரிவித்தார். கடைசி 8 வருடங்கள் தனியாக வாழ்ந்து உள்ளார். ஜப்பான் படையில் சேரும் முன்னர் டெய்லராக இருந்து உள்ளார். மரப்பட்டைகளை கொண்டு உடைகளை செய்து உள்ளார்.

ஒரு குகையில் வாழ்ந்து உள்ளார்.மூங்கில் கம்புகளை கொண்டு தன் குகையினை மூடி வைத்துக் கொள்வாராம். பக்கத்தில் இருந்த ஓர் நீரோடையில் குளித்து, அந்த தண்ணீரினை குடித்தும் வாழ்ந்து உள்ளார். தன் தாய் எம்பிராய்ட் செய்து தந்த ஒரு துணியும்,ஜப்பான் நாட்டு கொடியும் அவரின் குகையிலிருந்தது. அத்தனை வருடங்களும் உப்பு சேர்க்காத உணவினை உண்டு வாழ்ந்து உள்ளார். எலி,மான்களை பிடித்து வேகவைத்து உணவாக சாப்பிட்டு உள்ளார். கனிகள்,தேங்காய் முக்கிய உணவாக சாப்பிட்டு உள்ளார். போர் முடிவிற்கு வந்து விட்டது என்று தெரிந்து இருந்தும் வெளியில் வர பயமாய் இருந்ததாய் தெரிவித்தார்.

ஜப்பானுக்கு அழைத்துக் கொள்ளப்பட்டார். இரத்த சோகையினை தவிர எந்த நோயும் அவருக்கு இல்லை. அந்த ஆண்டே மிஹோகோ என்ற 44 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இயற்கையுடன் வாழ்வது எப்படி என்று தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சிகள் நடத்தினார். 1991-ல் அப்போதைய ஜப்பான் மன்னரால் கெளரவிக்கப்பட்டார். அவருக்கு அரசு பென்ஷன் வழங்கியது.இறக்கும் முன் அடிக்கடி குவாம் தீவிற்கு போய் வந்தார்.
1997-ல் தனது 82ஆவது வயதில் ஹார்ட் அட்டாக்கில் மருத்துவமனையில் இறந்தார்.விசித்திரமான மனிதர் தான்.


4 comments:

ஜோதிஜி said...

உணவு இல்லாமல், வேறு எந்த தொந்தரவும் இல்லாமல் வாழ்தவருக்கு உள்ளே வாழ மக்களுடன் வாழ வாய்ப்பு கிடைத்த போது உருவான மாரடைப்பு தான் இதில் முக்கிய செய்தி. விசித்திரம் என்பது சூழ்நிலை மட்டுமல்ல. மனிதர்களின் வாழ்க்கை முறையும்.

Anonymous said...

உங்களுடைய இந்த பதிவு கேட் அவே என்ற ஆங்கிலப்படத்தை நினைவு படுத்தியது. நன்றி

க. சுரேந்திரன்.
அகம் புறம்.

பின்னோக்கி said...

வித்தியாசமான மனிதரைப் பற்றி தெரிந்து கொள்ள உதவியது. உப்பு இல்லாமல் அவ்வளவு நாள் வாழ்ந்தது ஒரு அதிசயமே.

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி ஜோதிஜி,சுரேந்திரன்,பின்னோக்கி..