நாங்கள் 13 பேரும் தங்கி கொள்ளும் அளவிற்கு மூன்று பெரிய ரூம்களுடன், ஒரு பெரிய ஹாலுடன் அட்டகாசமாய் இருந்தது நாங்கள் தங்கி இருந்த படகு வீடு.படகு ரொம்ப ஸ்பீடாய் போகுது ஜாக்கிரதை என குழந்தைகளை எச்சரித்து விட்டு(சும்மாச்சும்) ஓடும் ஜீலம் நீரை வேடிக்கை காண்பித்து விட்டு இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க போனோம்.
படகு காரரிடம் காலை உணவு ஆம்லெட்,ப்ரெட் ஆர்டர் செய்தோம். அவர் பூவா,பூவா செய்து தரவா என்று கேட்டார். நான் தான் வரும் இடம் எல்லாம் சும்மா தோசை என்று பறக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு அவர் சொன்ன பூவா 3 ஆர்டர் சொல்லிவிட்டேன்.என்னவென்றே தெரியாததால் காலையில் பூவா அனைத்தும் எனக்கு தான் என்று நம் படையினர் சொன்னார்கள். காலையில் பூவாவை திறந்து பார்த்தால் அது நாம் செய்யும் அவல் உப்புமா!!!நன்றாகவே இருந்தது பூவா...சாப்பிட்டுட்டு சோன்மார்க் செல்ல தயாரானோம். தங்க நிலம் என்று அர்த்தமாம். கடுகு செடியின் மஞ்சள் பூக்கள் வழி நெடுக இருக்குமாம் மே மாதம் தான் சீசனாம். இப்ப்அகொஞ்சமாய் பூத்து இருந்தது.
நம்ம மியாவ் 2 மணிநேரத்தில் சோன்மார்க்கில் இறக்கி விட்டார். கொஞ்சமாய் மழை பெய்து கொண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் சுற்றிலும் தூரத்தில் பனி மலை. காரை விட்டு இறங்கியதும்,குதிரைக்காரர்கள் கூட்டம் கூடியது நம் படையினை சுற்றி. நம் படையினருக்கு ஏற்கனவே, குதிரை ஏறத்தெரிந்து இருந்ததால் ஆளுக்கு ஒரு குதிரையில் வாடகைக்கு குளிர்கால உடைகளை வாங்கி அணிந்துக் கொண்டு ஏதோ நிலாவில் இறங்க போகும் தோரணையில் புறப்பட்டனர். பாதையே இல்லாமல் கல்,மண்,மேடு,பள்ளம் என்று சவாரி ஆரம்பம் ஆனது.மழை வேறு அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது. நம் உயிர் நம் கையிலேயே இல்லை. கூட யார் வருகிறார்கள் என்று தெரியவில்லை. கையெல்லாம் மரத்து போனது. குதிரையையும் அதன் பையாவையும் நம்பி பயணம் ஆரம்பித்தது. மிக பள்ளமான இடங்களில் கண்களை இறுக்க மூடி கொண்டனர் அனைவரும்.அதை நான் ஓட்டை கண் விட்டு பார்த்தேன். ஒரு மணிநேரத்திற்கு அப்புறம் இந்த தாஜிவாஸ் கிளேசியர்ஸில்
நாங்கள் எதிர்பார்த்த பவுடர் மாதிரியான பனி துகள்கள் இங்கு இல்லை. அடர்த்தியான பனி போர்த்திய மலை தான் இங்கு இருந்தது.
இன்னும் வரும்...

2 comments:
//ஒரு 4 நாட்களாவது ஆண்களை ஃப்ரீயா விட்டுவிடலாம் என்று சமைக்க வேண்டாம் என்று சொல்லி, போட்டிலேயே சாப்பாடு ஆர்டர் செய்து விட்டோம்.///
என்ன ஒரு பெருந்தன்ம ,
நல்லாருக்கு ,
படங்களைப் பார்த்தால் நியூசிலாந்து ஞாபகம் வருகிறது
Post a Comment