Monday, October 12, 2009

ஐடியா ப்ளீஸ்...

அடுத்த மாதம் கேரளா போகலாம் என்று இருக்கிறேன் 12லிருந்து 15 நாள்கள். இரண்டு ஃப்ரண்ட்ஸ் குடும்பம் வெளிநாட்டிலிருந்து வராங்க என்னை நம்பி.அழைத்துப் போகும் முழு பொறுப்பும் என்னுடையது. தமிழர்கள் தான்.வழக்கம் போல் என் மகன்களை என் அம்மாவிடம் விட்டுட்டு போவதாய் இருக்கிறேன். நான் போகவில்லை என்று சொன்னாலும் என்னவர் போய்ட்டு வா என்கிறார். (நிம்மதியாய் ஒரு 15 நாட்கள் இருப்பார் போல) முழு கேரளாவும் பார்க்கிற மாதிரி ப்ளான். நம்ம பதிவர்கள் கொஞ்சம் ஐடியா கொடுங்களேன்.

சென்னையிலிருந்து கோவை ட்ரையின் பின் கார்...
காரில் கோவையிலிருந்து ஊட்டி வழியாக வயநாடு போய் பின் அப்படியே உயிரே உயிரே என்று அரவிந்த் சாமி பாட மனிஷா ஓடி ஓடி இறுதியில் அரவிந்திடம் வரும் இடம்(மும்பாய் ஃபிலிம்) Bekal fort(near mangalore).
அங்கிருந்து கோழிக்கோடு,திருச்சூர்,குருவாயூர் வந்து காரை கோவை அனுப்பிவிட்டு..அங்கிருந்து நைட் ட்ரைனில் திருவனந்தபுரம் போய் அருகில் உள்ள இடங்களை காரில் சுற்றிவிட்டு ஆலப்புழா வந்து அங்கிருந்து போட் ஹவுஸில் கொச்சின் வந்து, கொச்சினை, அருகில் உள்ள இடங்களை சுற்றிவிட்டு பின் கொச்சினிலிருந்து ட்ரைனில் சென்னை வரலாம் என்று யோசனை உள்ளது. முழு கேரளாவும் கார் என்றால் கஷ்டமாக இருக்கும் என்று இப்படி ஒரு யோசனை உள்ளது.
இதில் முக்கியமான நீங்கள் பார்த்து ரசித்த இடங்களை பற்றி விவரங்கள் வேண்டும். வேறு ஏதேனும் ஐடியா இருப்பினும் சொல்லுங்கள். இன்னும் நான் ட்ரையின் டிக்கெட் புக் செய்யவில்லை.கோயில்கள்,முக்கியமான இடங்கள் ஹோட்டல் விவரம் தெரிந்தாலும் கூறவும்.சாப்பாடு எங்கு என்ன ஸ்பெஷல் என்பது போல் விவரம் வேண்டும். நல்ல ஐடியா கொடுக்கப்போகும் அனைவருக்கும் கேரளாவிலிருந்து ஒரு பரிசு உண்டு!

10 comments:

நிகழ்காலத்தில்... said...

பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்..

கிளியனூர் இஸ்மத் said...

உங்க சுற்றுலா இனிமையாக அமைய வாழ்த்துக்கள்....

கேரளாவைப்பற்றிய சில இடங்களின் புகைப்படங்கள் எனது கிளிக்...கிளிக் பதிவில் இருக்கு அவசியம் பாருங்கள்...முகவரி

www.lrismath.blogspot.com

கபிலன் said...

ஆலப்புழா போட் ஹவுஸ் நல்லா இருக்கும். ஆனா, நல்ல படகில் போங்க...கொஞ்சம் வாடகை ஜாஸ்தியா இருந்தாலும் பரவாயில்லை. இல்லைன்ன...பல்லி, எலி எல்லாம் படகுல உங்க கூட இருக்கும்.... : )

மூனார் போகலாம்...க்ளப் மஹிந்த்ரா ரிசார்ட் நல்லா இருக்கும்...

ஆயூர்வேதிக் ஸ்பா ரிசார்ட்டுகள் நிறைய இருக்கு.....நல்ல ரிசார்ட்டா தேர்ந்தெடுத்து போகலாம்..

அப்புறம்...மறக்காம கிராமப்புறம் வழியாக செல்லும் போது, வயல் வெளி நடுவில் உள்ள குடிசைக் கடைகளில், பானையில் கள்ளும் ஊறுகாயும் தருவாங்க....சூப்பரா இருக்கும் : )

மணிஜி said...

சிப்ஸ் வாங்கிட்டு வாங்க

Jawahar said...

அருமையாகப் ப்ளான் போட்டிருக்கிறீர்கள், இதில் நாங்கள் என்ன சொல்ல இருக்கிறது!

ஒரே ஒரு எச்சரிக்கை, உங்களுக்கு அடை பிடிக்கும் என்றால் கேரளா ஹோட்டல்காரர்கள் அடா என்று குறிப்பிடுவது அதைத்தான் என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள்.

நான் அடா கேட்டு விட்டு நாக்கை சப்பு கொட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

மாவடத்துக்குள் கொழக்கட்டைப் பூர்ணம் வைத்த மாதிரி ஒன்றைக் கொடுத்து என்னை ஆப் செய்து விட்டார்கள்.

சோட்டானிக்கரை கோயில் பாருங்கள். மன நோயாளிகள் நெற்றியால் மரத்தில் அடித்த ஆணிகளைப் பார்த்தால் திக்கென்று இருக்கும்.

http://kgjawarlal.wordpress.com

Vidhoosh said...

போட் ஹவுஸ் வாடகைக்கு எடுத்தால் கொஞ்சம் தீர்மானமாக விசாரித்துக் கொள்ளுங்கள்.

மூணாறு போகலாம். ரொம்ப அற்புதமாக இருக்கும். இரண்டு நாள் என்று வைத்துக் கொண்டு, தங்கும் விடுதிகள் அதிக தூரம் / அதிக costly -யாக இல்லாமல், சாதாரணமாக அரசால் நடத்தப் படும் விடுதிகளில் தங்கி கொள்ளுங்கள்.

கேரளாவில் தரமான விடுதிகளில் கூட, உணவு படு மோசம். பெரும்பாலும் சாண்ட்விச், பழங்கள், காய்கறிகள் வாங்கி நீங்களே சாலட் செய்து சாப்பிடப் பழகுங்கள். கையில் அங்கங்கே ready to eat, corn flakes, oats போன்றவற்றை வாங்கி சாப்பிடுங்கள். வயிறும் மோசம் செய்யாமல் இருக்கும்.

போட் ஹவுஸ்சில் போக காலை எட்டு மணிக்கே போட்-டில் ஏறி விடுமாறு பார்த்துக் கொண்டால் சௌகரியம். ஏனென்றால் மாலை ஏழுமணிக்கு, ஏதோ ஒரு ஆயுர்வேத மசாஜ் சென்டர் அருகில் நிறுத்தி விடுவார்கள். மறுநாள் காலை எட்டு மணிக்குத்தான் மீண்டும் பயணிக்க முடியும்.

நாங்கள் போன போது நிறையா மலை சார்ந்த இடங்களுக்கு trekking போல போனோம்.

november-ரில் மழையாக இருக்குமே?

--வித்யா

Vinitha said...

Fort Cochin கெஸ்ட் ஹோமில் தங்கவும். அது தான் நல்லது. :-) நிறைய சுற்றி பார்க்கலாம்! அப்புறம் எர்னாகுளம் போட்டில் செல்லவும்! அருமை...

வயநாடு முடித்தவுடன் கோழிக்கோடு கடவு ரிசார்ட் அருமையாக இருக்கும். போட்டிங் எல்லாம் உண்டு. நல்ல ஊர்.

அப்புறம் குமரகம் ஏரியா. கோட்டயம். லையன்ஸ் க்ளுப் கெஸ்ட் ஹவுஸ் உண்டு.

குருவாயூர், திரிச்சூர் வடக்கநாதன் கோவில் மிஸ் பண்ண வேண்டாம்!

திருவனந்தபுரம் வேஸ்ட்! காஸ்ட்லி.
அப்படி போனால், கண்ணியாகுமாரியும் பாருங்கள்!

Unknown said...

திருவனந்த புரம் அருகே வர்க்கலா என்று ஒரு இடம் இருக்கிறது. மினி கோவா. இரண்டு நாட்கள் தங்கி வரலாம். மிகவும் அழகான இடம். கடலும் கடலுக்கு அருகிலேயே ஒரு குன்றும். அந்தக் குன்றின் மீதிருந்து கடலைப் பார்ப்பதே ஒரு ரம்மியமான அனுபவம்.

அமுதா கிருஷ்ணா said...

ஐடியா கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி....

butterfly Surya said...

கொச்சினிலிருந்து அதிரம்பள்ளி (புன்னகைமன்னன்) falls போகலாம். காலடி (ஆதிசங்கரர்) அவதரிதத கிராமம். ஆலயம் நதியருக்கே அமைந்துள்ளது. மிக மிக அமைதியாக அற்புத இடம்.

கொச்சினில் தங்க பாரத் டூரிஸ்ட் ஹோம் அருமையான ஹோட்டல். சூப்பர் Veg உணவு வகைகள். Don't miss it.