Friday, September 11, 2009

சினிமாக்களில் பார்த்து பார்க்க ஆசைப் பட்ட இடங்களும் பார்த்த இடங்களும்....


அத்திரபள்ளி அருவி : புன்னகை மன்னனில் என்ன சத்தம் இந்த நேரம்...இந்த பாட்டை பார்த்த நாள் முதல் சாலக்குடி அருவியை பார்க்கவேண்டும் என்று ஆசை. பார்த்தாச்சு. கொச்சினிலிருந்து 2 மணி நேரம் திருச்சூர் நோக்கி பயணம். சாலக்குடி என்ற ஸ்டேஷன் உள்ளது. இங்கிருந்து அத்திரபள்ளி அருவி போக வர டவுண் பஸ் உள்ளது. காரில் போக வர 700 ரூபாய் ஆகும்.
போகும் போது தூரத்திலேயே அருவி தெரிகிறது. ஏப்ரல், மே தவிர மற்ற மாதங்களில் நல்ல தண்ணீர் உள்ளது. கீழே போவதற்கு நல்ல வழி கிடையாது. ஆனாலும் பாறைகளில் இறங்கி போய் வரலாம். சாரல் அடித்தே நனைந்து போய் விடுவோம். மேலே நதி போல் வரும் நீரில் குளிக்கலாம்.


பத்துமலை முருகனும் முருகன் பின்னால் இருக்கும் மலையும்:
மலேசியாவில் இருக்கும் இந்த மலை நிறைய படத்தில் பார்த்து இருப்போம். தமிழ் நாட்டில் கூட இது மாதிரி பெரிய சிலை முருகனுக்கு இல்லை. செங்குத்தாய்
இருக்கும் ஒரு 200 படிகளில் மேலே போனால் முருகன் சன்னதியில் சின்னதாய் இருக்கிறார். மழை பெய்தால் உள்ளே கோயிலில் தண்ணீர் விழும்.இயற்கையாகவே அமைந்து இருக்கும் மலையும்,சிகரங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியும் மிக நன்றாக உள்ளது.ரீசண்டாக பில்லா(அஜித்) படத்திலும் வரும்.மிக அருமையான மலை.


லங்காவி ஸ்கை பிரிட்ஜ்: இதுவும் பில்லா படத்தில் வரும். நிலத்திலிருந்து 700 மீட்டர் உயரமுள்ள இந்த பிரிட்ஜிற்கு கேபிள் காரில் போய் பின்னர் படிகளில் இறங்கி போக வேண்டும். அதிலிருந்து பார்த்தால் பக்கத்தில் கடலும்,தீவுகளும் தெரிகிறது. இந்த பிரிட்ஜ் நேராக இல்லாமல் வளைந்து உள்ளது.மிகஅருமையான இயற்கை எழில் கொஞ்சும் இடம்.


சிங்கப்பூர் சிங்கம்:
நினைத்தாலே இனிக்கும்(கமல்) படத்தினை பார்க்கும் போதெல்லாம் பார்க்க நினைத்தது.சிங்கப்பூர் சிங்கம் வாயில் தண்ணீர் வருவதை குழந்தை போல் ரசிச்சாச்சு.





தாஜ்மஹால்+இந்தியா கேட்: இது மெளன ராகம், மற்றும் ஆசை படம் பார்த்ததில் இருந்து பார்க்க ஆசை பட்டது. தாஜ் மகாலை இரண்டு தடவை பார்த்தும் ஒரு முறையாவது பெளர்ணமி அன்று பார்க்க ஆசை.ஆனால் நம் மக்கள் மும்தாஜின் சமாதியில் ஏன் சில்லறை காசை போடுகிறார்கள் என்பது புரியவில்லை.

4 comments:

Unknown said...

கல்யாணம் ஆன புதிதில் சாலக்குடி அருவியை நானும் பார்த்தேன் மிகவும் அருமை.. மீண்டும் போகனும் என்று ஆசை தான் ஆனால் நேரமில்லை..
மற்ற ஊர் எல்லாம் பார்க்கனும் என்று ஆசைதான் எப்ப டைம் கிடைக்குதோ.. தெரியலை

கார்க்கிபவா said...

நல்லா ஊர் சுத்துறீங்க மேடம்.. ம்ம். என்ஜாய்

Jaleela Kamal said...

அமுதா உங்கள் எல்லா ஆசைகளும் நிறைவேற வாழ்த்துக்கள்

நீங்கள் குறிப்பிட்ட இடங்களில் சிங்கப்பூர் சிங்கம் வாயில் தண்ணீர் வருவது அது ஒன்று தான் பார்த்து இருக்கிறேன்/

நிஜமா நல்லவன் said...

நல்லா சுத்தி பார்த்து இருக்கீங்க...குட்!