Wednesday, November 19, 2014

இனிமே பிரியாணி செய்வீங்க??

எங்க வீட்டுக்காரருக்கு இந்த கேள்வி!!!

பிரியாணி ஹோட்டல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திண்டுக்கல்லில் வைத்திருந்த குடும்பம். அதனால் எங்காச்சும் சொந்தக்காரங்க,ஃப்ரெண்ட்ஸ் வீட்டிற்கு போனா கட்டாயம் பிரியாணி செய்ய சொல்வாங்க.மாட்டேன் என்று தட்ட முடியாது. ஆனா ஒவ்வொரு முறையும் பிரியாணி டேஸ்ட் ஒவ்வொரு விதத்தில் வரும். எங்க வீட்டில் எப்ப செய்தாலும் ஒரே மாதிரி வரும். ஆனா மற்ற வீடுகளில் டேஸ்ட் மாறி இது என்னடான்னு கஷ்டமா போயிடும்.

காரணம்:

ஒரு வீட்டில் பிரியாணி செய்ய பொங்க பானை??? கொடுத்தாங்க.எங்க மேல என்ன கோவமோ.

ஒரு வீட்டில் ஈர விறகு கொடுத்தாங்க..நாங்க வர்றோம்னே நனைச்சு வச்சாங்க போல

ஒரு வீட்டில் மிகவும் பழைய அரிசி..ஒரு வீட்டில் பாசுமதி அரிசி..ஆயிரம் வாட்டி ஃபோனில் சொல்லி இருப்போம் சீரக சம்பாஆஆஆஆஆஆஆ.

ஒரு வீட்டில் இருந்த பட்டையில் கலரோ வாசமோ சுத்தமா இல்லை...வீட்டில் இருந்த மரத்தில் இருந்து எடுத்து இருப்பாங்க போல..

ஒரு வீட்டில் அடுப்பில் செய்ய வேண்டாம்னு தீர்மானிச்சு கேஸ் அடுப்பில் செய்தால் கொடுத்த குக்கருக்கு வயது 25..கேஸ்கட்டுக்கு வயதே கணிக்க முடியலை இதுல விசில் நாங்க தான் வாயிலேயே அடிச்சுக்கணும் போல..

கேஸ் பெரிய பர்னர் சின்ன பர்னர் லட்சணத்தில் எறியும்..அதுல எப்ப கறி வெந்து எப்ப தண்ணீ கொதிக்க..

 நெய்யில் செய்தால் தான் எங்க வீட்டு(!) டேஸ்ட் வரும் ஆனா,கொலஸ்ட்ரால்னு சொல்லி ரீஃபைண்ட் ஆயில் கொடுத்தாங்க..நல்ல வேளை தேங்காய் எண்ணெய் இல்லை போல..

மிகவும் புளித்த தயிர் இல்லன்னா தரதரன்னு ஓடும் பிரிஞ்ச மோர் ஒரு வீட்டில் ..அந்த வஸ்துவை பார்த்தால் அழுகையே வரும்.

சிக்கனம் என்கிற பெயரில் நாம் சொல்லும் அளவிற்கு மட்டன் அல்லது சிக்கன் தரமாட்டாங்க..வாங்கி இருப்பாங்க அதுல கொஞ்சம் சைட்-டிஷ்ன்னு ஒதுக்கிடுவாங்க!என்ன ஒரு வில்லத்தனம்..

இஞ்சிக்கு சுக்கு மாதிரி ஒரு வஸ்து..இஞ்சிக்கு தாத்தாவோ..

மிக்சியை போட்டா அது ஏழூறுக்கு அலறும்..இல்லாட்டா இஞ்சி அரைக்க ஜூஸர் தருவாங்க..அடிங்க்..

இப்படி நல்லா செய்ய தெரியும் பிரியாணியை ஒரு வழியாக வேர்த்து விறுவிறுத்து அமுதாவும் கிருஷ்ணாவும் செய்து முடிப்போம்.

இதுல எடுபிடி வேலை அமுதா. பிரியாணி செய்வது கிருஷ்ணா.நான் தனியா போனாக்கா ஒரு பைய நம்ம கிட்ட பிரியாணின்னு மூச்சு விடமாட்டாங்க!!!நான் தனியா செய்தாக்கா அது புளியோதரைன்னு யாரோ போட்டு கொடுத்து இருக்காங்க போல..அது..

இப்போதெல்லாம் சீரக சம்பா அரிசி,பட்டை, பட்டை பொடி எங்க வீட்டிலிருந்தே எடுத்து போயிடுவோம். அதே போல அங்கே போய் சங்கடம் பார்க்காம அவுங்க கூட சேர்ந்து ஷாப்பிங் செய்துடுறோம்.எனவே பிரியாணி அழகா வருது. அப்படியும் இந்த குக்கர்,அடுப்பு சமாச்சாரம் சில சமயம் காலை வாரி விடுவதுண்டு!!!

 புதுகைத் தென்றலின் டீ போட்ட கதை தான் இதை எழுத காரணம்.



16 comments:

ஹுஸைனம்மா said...

// சீரக சம்பா அரிசி,பட்டை, பட்டை பொடி எங்க வீட்டிலிருந்தே எடுத்து போயிடுவோம்//

ஆஹா... எவ்ளோஓஓஓ நல்லவங்க நீங்க.... எங்க வீட்டுக்கு ஒரு வாரம் வந்துட்டுப் போங்களேன்... ;-)

pudugaithendral said...

அவ்வ்வ்வ் டீ போட்டதுக்கே நான் காண்டானா, நீங்க பிரியாணி பத்தி பதிவு போட்டிருக்கீங்க. நீங்க நெம்ப பாவம்ங்க.

அமுதா கிருஷ்ணா said...

ஹூஸைனம்மா..நெல்லையா..அமீரகமா??டிக்கெட் போடணும்..

அமுதா கிருஷ்ணா said...

புதுகைத் தென்றல்..
இது பழகி போச்சு..அதனால கஷ்டமா தெரியலை.சேலஞ்சிங் ஆயிடுச்சு!!!

நம்பள்கி said...

நன்றாக உண்மையான காரணங்களை நகைச்சுவையுடன் எழுதியள்ளீர்கள்...மிகவும் ரசித்தேன்!

சுந்தரா said...

உங்க அளவுக்கு இல்லேன்னாலும் ஒண்ணுரெண்டு இடங்களில் இதுமாதிரி அனுபவப்பட்டதுண்டு :)

விருந்து வீட்டுக்குப் போயி விருந்தும் பண்ணிப்போட்டு... ஆனாலும் ரொம்ம்ம்ம்ப நல்லவங்க நீங்க :)

திண்டுக்கல் தனபாலன் said...

எங்க ஊருக்கு வாங்க...!

Anuprem said...

ஆகா பிரியாணி................
SUPER

வெட்டிப்பேச்சு said...

அது சரி, இந்த ரிசிப்பி நீங்க உங்க பதிவுகள்ல சொல்லியிருக்கரீங்களா..?

உண்மையாவே செய்து பார்க்கத்தான்.

திண்டுக்கல் பிரியாணியிலயும், ஆம்பூர் பிரியாணியிலயும் ஒரு ஈர்ப்பு இருப்பதென்னவோ உண்மைதான்.
கொஞ்சம் இந்த ரெண்டுக்கும் ரிசிப்பி சொல்லுங்களேன்.

வலைத்தளத்தில் தேடிப்பார்த்து எதுவும் சரிவரவில்லை.. அதனால்தான்..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வித்தியாசமான அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

Jaleela Kamal said...

இது போல நான் மாட்டி கொண்டது, பிரியாணி 2 படிகிட்ட செய்துட்டு தம் போட ஏற்றும் போது அடுப்பு சரியா எரியாம கொரசன் அடுப்பு ஏற்றி அது ஒரு பக்கமாக எரிய ,20 நிமிடத்தில் முடிய வேண்டிய வேலை, 1 மணி நேரம் எடுத்தது,

அமுதா கிருஷ்ணா said...

நம்பள்கி வருகைக்கு நன்றி
சுந்தரா வடிவேலு மாதிரி எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம்..

அமுதா கிருஷ்ணா said...

திண்டுக்கல் தனபாலன் அது எங்க ஊர் சார்..

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி அனுராதா ப்ரேம்

அமுதா கிருஷ்ணா said...

இல்லை ரெசிப்பி சொன்னதில்லை வெட்டிப்பேச்சு..

அமுதா கிருஷ்ணா said...

ஜலீலா,டாக்டர் ஜம்புலிங்கம் வருகைக்கு நன்றி