Tuesday, June 17, 2014

நானும் திநெவேலி அல்வாவும்

நெல்லையில் அவசர ஒரு நாள் வேலை. இங்கே பெருங்களத்தூர் சென்று நேரா நெல்லை போற பஸ்ஸில் ஏறியாச்சு.காலை நெல்லைக்கு 7 மணிக்கு போயாச்சு.நேரா ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிட்டு காலை 9 மணிக்கு வள்ளியூர் அங்கேயிருந்து ராதாபுரத்திற்கும் ஸ்டாண்டிங்கில் போய் 2 அவரில் போன வேலையினை முடித்து விட்டு திரும்ப நெல்லை வந்த போது 6 PM.

ஃப்ரெண்ட் வீட்டிற்கு ஓடோடி போய் பேக்கை எடுத்து கொண்டு ஜங்ஷனில் அல்வா,ஓமபொடி,காராச்சேவு வாங்கிட்டு பஸ்-ஸ்டாண்டில் சென்னை பஸ்ஸிற்கு நின்ற போது தான் தெரிந்தது நமக்கு சென்னைக்கு பஸ் கிடைக்காதென்று.15 ப்ரைவேட் பஸ்ஸில் விசாரிச்சாச்சு. நோ சீட்ஸ். சரி வா போகலாம் என்று நெல்லை புது பஸ்-ஸ்டாண்டிற்கு போனாக்கா சென்னை பஸ் நஹி. சரி கிடைச்ச பஸ்ஸில் போகலாம் என்று திருச்சி பஸ் தேடினால் ஃபுல்.அட ராமா என்னடா இது சோதனை என்று நினைத்த போதே அதோ

 கிடைச்ச ஒரு  மதுரை பஸ்ஸில் ஏறி கிடைச்ச சீட்டில் இப்ப என்ன 9 ஆ நைட் 12,30க்குள்ளே மதுரை போனாக்கா சென்னை ப்ஸ்ஸில் ஏறினாக்கா காலை 8 குள்ளே நம்சென்னைவீட்டுக்கே போயிடலாம் என்று குன்சா கணக்கு போட்டு கொண்டு உட்கார்ந்தாச்சு. காலையிலிருந்து உட்காரவேயில்லை. ஆஹா உட்கார்ந்தா இவ்ளோ சுகமா இன்று தானே இது தெரிஞ்சுதுன்னு நினைச்சுகிட்டே முகத்தில் மோதும் காற்றோடும்  நைட் சாப்பிடாத வயிற்றோடும், காதில் இளையராஜாவோடும் அப்படியே ஐக்கியமானேன்.

எல்லாம் நல்லாதான் போயிட்டு இருந்தது. ஆஹா பசிக்கிற மாதிரி இருக்கே அல்வாவாச்சும் சாப்பிடலாமா என்று நினைத்து பையில் கையை விட குனிந்தால் டமால்னு ஒரு சத்தம் போய் கொண்டிருந்த பஸ் அப்படியே நின்னிருச்சு. பஸ் டயர் பணால்.எல்லோரும் கீழே இறங்கி என்ன என்று பார்த்து கொண்டிருக்கும் போது நாம அல்வா தின்னாக்கா நல்லாயிருக்காதுன்னு நானும் கீழே இறங்கினேன். கோவில்பட்டியே இன்னும் வரலை பஸ் இதுக்கு மேலே போகாது பேக்கை எல்லாம் எடுத்துட்டு இறங்குகோங்கன்னு கண்டக்டர் சொல்லிட்டார். நினைவா அல்வா பேக்கையும் எடுத்துட்டு கும்மிருட்டில் மக்களோடு மக்காய் நின்று கொண்டேன். அடுத்த அரைமணிநேரத்தில் அங்கே வந்த ஒரு டவுண் பஸ்ஸில் கண்டக்டர் ஏறுங்க ஏறுங்கன்னு சொன்னதும் கூட்டத்தோடு என்ன ஏதுன்னு யோசிக்காம ஏறி ஜன்னலில் இடம் பிடித்தேன். அது தானே முக்கியம்.

அடுத்த அரை மணிநேரத்தில் கண்டக்டர் இந்த பஸ் ஷெட்டிற்கு போகுது எல்லோரும் இறங்குங்கன்னு சொன்னதும் தான் ஓஹோ இந்த டவுண் பஸ் மதுரைக்கு போகாது போலன்னு அடுத்த கும்மிருட்டில் நடுரோட்டில் இறங்கி கொண்டோம். அல்வா பத்திரம்னு மனசு சொல்லுச்சு.

நெல்லையிலிருந்து வரும் பஸ்களில் தான் சீட்டே இருக்காதுன்னு எனக்கு முன்பே தெரியுமே.சீட் இருந்தாக்கா கூப்பிடுங்கன்னு சொல்லிட்டு ரோட்டோரமாய் இருந்த ஒரு பாலத்தில் வசதியா உட்கார்ந்து சரி இப்பவாச்சும் அல்வா சாப்பிடலாமான்னு யோசித்து கொண்டிருக்கும் போதே அங்கே இருந்த ஒன்றிரண்டு மகளிரும் என் கூட உட்கார இடம் தேடி அந்த கும்மிருட்டிலும் வந்து விட்டார்கள். நைட் 11.30க்கு அல்வா தின்னா சிரிப்பாங்களேன்னு கம்முன்னு அம்மா தண்ணீ மட்டும் குடித்து விட்டு உட்கார்ந்து கொண்டேன். ஒரு பத்து பஸ்ஸாவது கண்டக்டர் நிறுத்தி இருப்பார். அவை எல்லாமே ஸ்டாண்டிங்கில் போயிட்டுருக்கு. ஃபுட்ஃபோர்ட்டில் மதுரை வரை போய் பழக்கமில்லைன்னு நான் எந்த பஸ்ஸிற்கும் அலையவில்லை.

திருப்பூர் பஸ் ஒன்று வந்தது.கண்டக்டர் தனியே வந்த  லேடிஸ் முதல்ல போயிருங்கன்னு அந்த பஸ்ஸில் கொஞ்ச பேரை கெஞ்சி ஏத்தி விட்டார். பஸ்ஸில் ஏறினாக்கா பஸ் ஃபுல்லா தூங்கி கொண்டிருந்தார்கள். நைசா கீழே தள்ளிவிட்டா கூட தெரியாத மாதிரி தூங்கிட்டுருந்த ஒரு ஆளை கண்டு பிடித்து அவருக்கு பக்கத்தில் இருந்த ஒரு கம்பியில் முட்டு கொடுத்து 12 AM -ல் ஸ்டாண்டிங்.தேவுடா, எங்காச்சும் சீட் கிடைக்காதான்னு யோசிச்சுகிட்டே நின்றேன். அல்வா பொட்டணத்தை திறந்தாக்க வாசத்தில் எல்லோரும் எழுந்திருச்சு பங்கு கேட்டாக்கா என்ன செய்றதுன்னு திறக்கலை.

ஒன்றரை மணிநேரம் ஸ்டாண்டிங்..சாத்தூர், விருதுநகர்,திருமங்கலம் கும்மிருட்டில் என்ன அழகுன்னு ரசிச்சுட்டே வந்தாக்கா..கோவில்பட்டியில் ஏறுனவுங்க எல்லோரும் திருமங்கலத்தில் இறங்கிகோங்கன்னு கண்டக்டர் சவுண்ட் விட்டார். பஸ் பை-பாஸில் போகுது மதுரைக்குள்ளே போகாதுன்னு அடுத்த சவுண்ட் விட்டார்.

அடபாவிகளான்னு நொந்து கொண்டே திருமங்கலத்தில் இறங்கி மதுரை வந்த அடுத்த பஸ்ஸில் ஏறினா சீட் கிடைச்சிருச்சு. நைட் 1.30 மணி.அடுத்த முக்கால் மணிநேரத்தில் மதுரை வந்தாச்சு. அங்கே அலங்காரமாய் நின்று இருந்த ஒரு மினி சென்னை பஸ்ஸை பார்த்ததும் உயிரே வந்துச்சு. ஏறு உட்கார்ந்தால் 700 ரூபாய் சென்னைக்கு.
லேடிசுக்கு முன்னாடி சீட் என்று கொடுக்கவும் அப்பாடா திரும்ப ஜன்னல் சீட்டுடான்னு உட்கார்ந்த அடுத்த நிமிஷம் அல்வாவையும், ஒடைஞ்ச டீவியில் ஓடி கொண்டிருந்த ஒரு அந்து போன சினிமா சத்ததையும் மறந்து தூங்க ஆரம்பித்தேன். 2 மணிக்கு யாருடா சினிமா பார்ப்பாங்க?

காலை 10 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தாக்கா கால் இரண்டும் வீங்கி போயிருந்தன. என் பசங்க இரண்டும் அம்மா உனக்கு வயசாகிடுச்சுன்னு ஒரே கிண்டல். அதெல்லாம் இல்லை ஸ்டாண்டிங்கில் வந்ததால் தான் இப்படி ஆகி போச்சுன்னு அதுங்க கூட கத்திட்டு  11AM-லிருந்து 6PM வரை அப்படி ஒரு தூக்கம். மாலை ஆறு மணிக்கு எழுந்து அல்வாவை சூடு செய்து ஜமாய்க்கலாம் என்று தேடினால் வாங்கி வந்திருந்த அல்வா என் பசங்க சாப்பிட மாட்டார்கள் என்று என் அம்மா தன் மகன் வீட்டிற்கு கொடுத்து விட்டார்களாம். போச்சுடா நாம அல்வா சாப்பிட நினைத்தது அவ்ளோ தப்பா???
இனிமே அல்வா வாங்க நெல்லை போவேன்??

13 comments:

ராஜி said...

வாங்குனது அல்வாவா!? இல்ல பல்பான்னு நல்லா பார்த்தீங்களா!?

ஹுஸைனம்மா said...

என்ன அநியாயம் இது? மகன்கள் சாப்பிடலைன்னா அம்மா நீங்க சாப்பிடக்கூடாதாமா? எல்லா வூட்லயும் இப்பிடித்தான் அம்மான்னா ‘தியாகச் செம்மல்கள்’னு அவங்களே முடிவு பண்ணிக்கிறாங்க!!

ஆமா, அப்புறம் மாடியில் இருந்த தம்பி வீட்ல போய் அல்வா சாப்பிட்டாச்சுல?

அமுதா கிருஷ்ணா said...

ராஜி அதெப்டி தெரியும் அதான் அல்வா பார்சலை தான் காணோமே??

அமுதா கிருஷ்ணா said...

ஹூஸைனம்மாவிற்கு தெரிந்த உண்மை என் அம்மாவிற்கு தெரியலையே..கண்ணீரை துடைக்க உங்க கை இருக்குப்பா..அது போதும் எனக்கு..அல்வா எல்லாம் எனக்கெதுக்கு???

அமுதா கிருஷ்ணா said...

ஹூஸைனம்மா தம்பி கீழே..நாங்க தான் மாடியில!!!!

Avargal Unmaigal said...

//காலை 9 மணிக்கு வள்ளியூர் அங்கேயிருந்து ராதாபுரத்திற்கும் ஸ்டாண்டிங்கில் போய் 2 அவரில் போன வேலையினை முடித்து விட்டு திரும்ப நெல்லை வந்த போது 6 PM.//

கணக்கு உதைக்குதே

vanathy said...

அடப்பாவமே!

அமுதா கிருஷ்ணா said...

avargal unmaigal..போக வர 4 மணிநேரமாச்சு..ராதாபுரம் இறங்கி அங்கேயிருந்து ஒரு கிராமம்..அதுவுமில்லாமல் உடனே எங்கேயும் பஸ் கிடைக்கல.பஸ் ஸ்டாண்டில் அதிக நேரம் நின்னு நின்னு போதும்டா சாமி.

தக்குடு said...

நாங்களும் உங்க கூடவே ஸ்டாண்டிங்ல நின்னு ஒவ்வொரு தடவையையும் அல்வாவை வாய் வரைக்கும் கொண்டு போய் கொண்டு போய் கடைசில பல்பு வாங்கின மாதிரி ஒரு பீலீங்! அவ்வ்வ்வ்வ்வ்...

அமுதா கிருஷ்ணா said...

ஆமா தக்குடு கைக்கு கிடச்சுது வாய்க்கு கிடைக்கலை பாரேன்.

வெங்கட் நாகராஜ் said...

அட தோ இப்போ சாப்பிடுவாங்கன்னு நாங்களும் பார்த்துட்டே இருந்தா இப்படி ஆயிடுச்சே..... :)

கீதமஞ்சரி said...

ஒரு அல்வாவே அல்வா கொடுத்த கதையை இன்றுதான் கேட்கிறேன். ஹூஸைனம்மா கருத்துதான் என்னுதும். அம்மா என்றாலே தியாகம் தான்னு அவங்களே முடிவு பண்ணிடறாங்க... உண்மை. உண்மை. கடைசிவரைக்கும் எதிர்பார்ப்பைத் தூண்டிய சிறப்பான எழுத்து. இந்தப் பதிவுக்கு லேபிள் 'நெல்லை நொறுக்ஸ்' சூப்பர்.

arputharaju.blogspot.com said...

“இனி நான் திநெவேலி (ஊரின் பெயரே அழகுதான்) அல்வா சாப்பிடும் போதெல்லாம் இந்த கட்டுரை நினைவுக்கு வரும். பட்ட கஷ்டங்களை, அல்வாவுடன் நகைசுவை + short & sweet பேச்சு வழக்கையும் கலந்து சொல்லியுள்ளீர்கள். அழகான பதிவு...”