Friday, April 11, 2014

அழிக்க நினைத்தவன் அசத்துகிறான் -3

அசத்துகிறான் -1
அசத்துகிறான் -2

டாக்டர் அங்கிட்டு இங்கிட்டு போகும் போது என்னப் பிள்ளை வலி வந்துச்சா இல்லையா..எங்க ட்ரிப் ஏத்தி ஏத்தி கைதான் வலிக்குதுன்னு சொல்வேன்.10 ஆம் தேதி இரவு எங்கூட்டு ஆளுங்க + டாக்டர்கள் சதி திட்டம் தீட்டி 11 ஆம் தேதி காலையில 4 மணிக்கு சிசேரியன் செய்தாங்க.என்ன சார் வெளியில வரவே இஷ்டம் இல்லையான்னு சொல்லிக்கிட்டே ஒரு தடிப்பயலை வெளியில் எடுத்தாங்க பாருங்க நான் அழுக ஆரம்பிச்சுட்டேன். ரூமில் வந்து என்னை போடவும் என் பையனை என் பக்கத்திலேயே தான் போடணும் நான் அவனை பார்த்துட்டே இருப்பேன்னு தூங்கவேயில்லை.கொட்ட கொட்ட முழிச்சுட்டே இருந்தேன்.பையனுக்கு ஃபிட்ஸ் வருதா வருதான்னு செக்கிங்.மயக்கமா இருந்துச்சு ஆனா முழிச்சே இருந்தேன்.ஹெவி டோஸ் தூக்கத்துக்கு மருந்து கொடுத்திருக்கு இப்படி கொட்ட கொட்ட முழிச்சுட்டு இருக்காளேன்னு கண்ணை மூடி தூங்கு இல்லைன்னா உனக்கு பிராந்தி தான் கொடுக்கணும் என்று சொல்லிட்டு டாக்டர் சிரிச்சுட்டே போயிட்டாங்க.

                                            
மாமாவே குழந்தை நல மருத்துவர் தான். அவர் பையனை செக் செய்துட்டு நார்மலா இருக்கான்னு சொல்லிட்டு போனார்.ராத்திரிதான் தூங்கினேன்.7ஆவது நாள் தையல் பிரிக்கணும் என்று டாக்டர் சொல்லிட்டு காலை 11 மணிக்கு வருவோம்னு சொன்னாங்க.தையல் பிரிச்சா வீட்டிற்கு ஓடிடலாம்னு இருக்கும் போது கரெக்டா காலை 7 மணிக்கு பையனுக்கு ஃபிட்ஸ் வந்திடுச்சு.போச்சா இப்ப நான் அழுகவேயில்லை. என்ன என்ன மாத்திரை எவ்ளோ டோஸ் கொடுக்கணும்,விட்டமின் டி-3,கால்ஷியம் இவைகள் தான் தேவை என்று எனக்கு தான் தெரியுமே.
ஹாஸ்பிட்டலுக்கு வந்த என் கணவரை உடனே ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் அன்றிரவு எந்த ட்ரையினில் டிக்கெட் கிடைக்குதோ அதற்கு சென்னைக்கு டிக்கெட் வாங்கி வர சொல்லி அவர் முத்துநகரில் எமர்ஜன்சி கோட்டாவில் வாங்கி வந்தார். இன்னைக்கே போகணுமா உன்னால் முடியுமா முடியுமா என்று பாவம் கேட்டு கொண்டே இருந்தார். எவ்வளவு சீக்கிரம் போறோமோ அவ்வளவு சீக்கிரம் குழந்தைக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியுமே.

மறுநாள் காலையில் 10 மணிக்கெல்லாம் எக்மூர் சில்ண்ட்ரன்ஸ் ஹாஸ்பிட்டலில் அட்மிஷன் போட்டு வந்த டாக்டரிடம் என்ன என்ன ப்ளட் செக்கப் செய்ய வேண்டும் என்று நானே முந்திரிக் கொட்டையாய் சொல்லி பெரியவனின் கேஸ் ஹிஸ்டரி முழுவதும் ஒப்பித்து கால்ஷியம் லெவல், தைராய்டு லெவல் அடுத்த நான்கு நாட்களில் தெரிந்து கொண்டு 5 ஆவது நாளில் இன்று கட்டாயம் என்னை டிஸ்சார்ஜ் செய்து விடுங்கள் என்று நானே கேட்டு கொண்டு ஹாஸ்பிட்டலை விட்டு ஓடி வந்தேன்.பெரியவனுக்கு 23 நாட்கள் பட்ட துன்பத்தை இவனுக்காக 5 நாட்கள் மட்டும் அனுபவித்தேன். அதன் பிறகு ரொட்டீன் செக்கப் அது இது என தொடர்ந்த கவனிப்பால் இன்று இரண்டும் வளர்ந்து விட்டன.
                                           


பொறுமையாக வெளியில் வராமல் 20 நாட்கள் எக்ஸ்ட்ராவாக  வயிற்றிலேயே  இருந்த ரிஷி மிக பொறுமைசாலி.

அதிர்ந்தே பேசாது.வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிய என்னிடம் தான் மிக க்ளோஸ்.மிக பொறுமையாக பறவைகள்,விலங்குகள் என படம் எடுத்து அசத்துகிறான்.இன்று ரிஷிக்கு பிறந்த நாள்.சில மாதங்களாக கர்நாடகா காடுகளில் சுற்றி கொண்டிருக்கிறான்.இந்த துறையில் எவ்ளோ தூரம் சாதிக்க முடியும் என்று தெரியவில்லை. எனினும் சின்ன வயதில் ஒரு முயற்சி செய்யட்டுமே என்று அவன் விரும்பிய துறைக்கு செல்ல ஓக்கே சொல்லிட்டோம்.

4 comments:

”தளிர் சுரேஷ்” said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! பிரசவ வேதனையையும் சுவையாக சொல்லியமை அழகு!

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் செல்ல மகனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்....

மூன்று பகுதிகளையும் ஒன்றாக படித்து விட்டேன்! :)

ஹுஸைனம்மா said...

உங்க பொறுமையும் தைரியமும் வியப்பா இருக்குது. இறைவன் எல்லாம் நலமாக்கித் தந்தானே!

ஆனா பாருங்க, இதோட மூணுவாட்டி கேட்டுட்டேன். நீங்க பதில் சொல்லவேயில்ல!!

கால்ஷியம், தைராய்ட் குறைபாட்டிற்கு என்ன காரணம்? அதனால் பிட்ஸ் ஏன் வருகிறது? தெரிந்துகொள்வதற்குத்தான்.

அமுதா கிருஷ்ணா said...

ஹூஸைனம்மா நான் சொந்தத்தில் என் தாய் மாமாவை திருமணம் செய்துள்ளேன். என் பாட்டிக்கு அவர்களின் 40ஆவது வயதில் தைராய்டு பிரச்சனை வந்தது. அது என் மகன்களுக்கு பிறக்கும் போதே வந்து விட்டது. தைராய்டு குறைவாக சுரக்கும் போது விட்டமின் டி, கால்ஷியம் சத்து ரத்தத்தில் குறைந்து விடுகிறது. மிக குறைவான கால்ஷியம் பிட்ஸ் வர காரணம். கால்ஷிய்ம் உடம்பில் ஸ்டோர் ஆக தைராய்டு சுரப்பி நன்கு வேலை செய்ய வேண்டும்.கால்ஷியம்,விட்டமின் -டி,தைராய்டு மாத்திரைகள் கொடுக்க ஆரம்பித்ததும் படிப்படியாக ஃபிட்ஸ் நின்று விட்டது. sorry for late answer..