பெரியவனுக்கு ஒரு வயதும் 3 மாதங்களும் நடந்து கொண்டு இருக்கும் போது திடீரென்று ஒரு நாள் ஒரு டவுட்.என் அம்மா தன் கடைசி தம்பியின் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய திண்டுக்கல் ஒரு மாதம் முன்பே போய் இருந்தார்கள்.கல்யாண நெருக்கத்துக்கு போலாம் என்று நாங்க ப்ளான் செய்து இருந்தோம்.ஆனால், நான் எனக்கு அந்த டவுட் வந்தவுடனே திண்டுக்கல் போகணும் என்று சொல்லவும் என் கணவரும் என் கூடவே கிளம்பி விட்டார்.
டாக்டர் சரி செய்துடலாம். இன்னும் 6 நாட்களில் வீட்டில் கல்யாணம் இருக்கும் போது நீ மட்டும் ஹாஸ்பிட்டலில் இருப்பியா.எல்லாம் என்ன எதுக்கு என்று கேப்பாங்க, கல்யாணம் முடியட்டும் செய்துடலாம் என்று சொல்லி கல்யாணத்துக்கு புது புடவை எல்லாம் எடுத்தியா?ப்ளவுஸ் எல்லாம் தைச்சாச்சா?ஊரிலிருந்து வரும் போது நகை எல்லாம் எடுத்து வந்தியா? இப்படி மிக முக்கியமான கேள்வி எல்லாம் கேட்டு,பெரியவன் இப்ப எப்படி இருக்கான் என்று பேசி வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.
சரி இன்னும் 5 நாட்கள் தானே அதுக்கு அப்புறம் ஹாஸ்பிட்டல் வரலாம் என்று கல்யாண மூடில் வீட்டிற்கு போய் விட்டேன். கல்யாணமும் முடிந்தது. மறுநாள் டாணென்று ஹாஸ்பிட்டலுக்கு ஒரே ஓட்டம்.பார்த்தா என்னுடைய டாக்டர் மாமா,காஞ்சனா டாக்டர் அவர்களின் இன்னும் இரண்டு டாக்டர் ஃப்ரெண்ட்ஸ்.
ஒரு டாக்டர் இருந்தாலே வயத்த கலக்கும். இதில் நான்கு டாக்டர்கள். இந்தோ பாரும்மா..அபார்ஷன் செய்தால் ரொம்ப ரத்தம் லாஸ் ஆகும்.நீ அண்டர் வெயிட்(44கிலோ) எனவே உன் உடம்பு தாங்காது. இல்லை நான் நல்லா சாப்பிட்டு உடம்ப பாத்துப்பேன். திண்டுக்கல்லிலே இருந்து தினம் பிரியாணி(தாத்தா ஹோட்டல் வைத்து இருந்தார்) மட்டன் அப்படி சாப்பிட்டு வெயிட் ஏத்திக்கிறேன். எனக்கு அபார்ஷன் வேண்டாம்னு சொல்லிடாதீங்கன்னு திரும்ப அழுவாச்சி.
அழுவாச்சி என்னாச்சு நாளைக்கு.....
அங்கே போனதும் காலை 9 மணிக்கெல்லாம் என் சித்தி டாக்டர் காஞ்சனாவை பார்க்க ஓடி விட்டேன். எஸ் என்னுடைய டவுட் கரெக்ட் தான். இரண்டாவது குழந்தை 50 நாட்கள் வயிற்றில். தெரிந்ததும் சந்தோஷம் வரலை. அழுகை தான் வந்தது. எனக்கு இந்த குழந்தை வேண்டவே வேண்டாம். வேண்டாம் என்றதற்கு காரணம் இது தான். எனக்கு அபார்ஷன் செய்துடுங்க என்று ஒரே அழுகை.அம்மா,கணவர் எல்லோரும் வேண்டாம் என்று சொல்ல சொல்ல அழுகை.
டாக்டர் சரி செய்துடலாம். இன்னும் 6 நாட்களில் வீட்டில் கல்யாணம் இருக்கும் போது நீ மட்டும் ஹாஸ்பிட்டலில் இருப்பியா.எல்லாம் என்ன எதுக்கு என்று கேப்பாங்க, கல்யாணம் முடியட்டும் செய்துடலாம் என்று சொல்லி கல்யாணத்துக்கு புது புடவை எல்லாம் எடுத்தியா?ப்ளவுஸ் எல்லாம் தைச்சாச்சா?ஊரிலிருந்து வரும் போது நகை எல்லாம் எடுத்து வந்தியா? இப்படி மிக முக்கியமான கேள்வி எல்லாம் கேட்டு,பெரியவன் இப்ப எப்படி இருக்கான் என்று பேசி வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.
சரி இன்னும் 5 நாட்கள் தானே அதுக்கு அப்புறம் ஹாஸ்பிட்டல் வரலாம் என்று கல்யாண மூடில் வீட்டிற்கு போய் விட்டேன். கல்யாணமும் முடிந்தது. மறுநாள் டாணென்று ஹாஸ்பிட்டலுக்கு ஒரே ஓட்டம்.பார்த்தா என்னுடைய டாக்டர் மாமா,காஞ்சனா டாக்டர் அவர்களின் இன்னும் இரண்டு டாக்டர் ஃப்ரெண்ட்ஸ்.
ஒரு டாக்டர் இருந்தாலே வயத்த கலக்கும். இதில் நான்கு டாக்டர்கள். இந்தோ பாரும்மா..அபார்ஷன் செய்தால் ரொம்ப ரத்தம் லாஸ் ஆகும்.நீ அண்டர் வெயிட்(44கிலோ) எனவே உன் உடம்பு தாங்காது. இல்லை நான் நல்லா சாப்பிட்டு உடம்ப பாத்துப்பேன். திண்டுக்கல்லிலே இருந்து தினம் பிரியாணி(தாத்தா ஹோட்டல் வைத்து இருந்தார்) மட்டன் அப்படி சாப்பிட்டு வெயிட் ஏத்திக்கிறேன். எனக்கு அபார்ஷன் வேண்டாம்னு சொல்லிடாதீங்கன்னு திரும்ப அழுவாச்சி.
அழுவாச்சி என்னாச்சு நாளைக்கு.....
4 comments:
ஓ.. தலைப்புக்குக் காரணம் இதுதானா... நானும் அரசியல் அல்லது ஆன்மீகமா இருக்குமோன்னு நினைச்சுகிட்டே வந்தேன்... :-))))))
முதல் குழந்தையின் கால்ஷியம் மற்றும் தைராய்ட் குறைபாட்டிற்கு என்ன காரணம்னு தெரிஞ்சுதா?
வலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பாராட்டுகள்.
அடுத்து...?
தொடர்கிறேன்...
தொடர்கிறேன்!
Post a Comment