Monday, January 13, 2014

2014 - புத்தகக் கண்காட்சி

ஒன்றுக்கும் உதவாதவன் படித்ததில் இருந்து அ.முத்துலிங்கம்  புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று மட்டும் முடிவு செய்திருந்தேன். மற்ற படி எந்த ஐடியாவும் இல்லை. நான், தங்கை குமுதா,தம்பி மது,மகன் ரிஷி மற்றும் என் கணவர் கிருஷ்ணா மிஸ்டர் முத்துலிங்கத்தை தேடி தேடி கடைசியில் காலச்சுவடு பதிப்பகத்தில் இந்த மூன்று புத்தகங்களும் வாங்கினோம்.

புதுமைப்பித்தன் அவ்ளோவா படிச்சதில்லை. இந்த புத்தகத்தில் 103 சிறுகதைகள் இருக்கு.விலை 315ரூபாய்.
எப்பவும் வா.மணிகண்டனின் நிசப்தம் படிக்க பிடிக்கும். எனவே அவருடைய சிறுகதைகள் லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் வாங்கியாச்சு.
ஆறாம் திணை விகடனில் வந்த தொடர். இதை படிச்சா மட்டும் போதாது. ஏதேனும் இரண்டு விஷயங்களை இந்த ஆறாம் திணையில் சொல்லியிருக்கும் படி தொடர வேண்டும்.  நம் பாரம்பரிய உணவை பற்றிய இந்த புத்தகம் எழுதியவர் சித்த மருத்துவர் சிவராமன். பாவண்ணன், நாஞ்சில் நாடன் புத்தகங்கள் மற்ற இரண்டும்.
கீழே இருப்பவை  வழக்கம் போல் என் வூட்டுக்காரர் கிருஷ்ணமூர்த்தி வாங்கியது.  எப்பவாச்சும் தூக்கம் வரலைன்னா நான் வூட்டுக்காரர் வாங்கி அடுக்கி வைத்திருக்கும் இங்கிலிபிஷ் புத்தகத்தை எடுத்து ஒரு பக்கம் வாசிக்க ஆரம்பிப்பேன் ஆஹா என்ன ஒரு அருமையான தூக்கம் வரும் தெரியுமா!!!!இரண்டாவது பக்கம் புரட்ட கூட முடியாது அதுக்குள்ளே இரண்டாம் உலகத்திற்கு போயிடுவேன். இந்த வருஷமாவது அட்லீஸ்ட் ஒரு புக்காவது பகலில் உட்கார்ந்து கொண்டே படித்து முடிக்க வேண்டும்.

இவை தவிர மாயவலை,இன்னும்  மூன்று பாவண்ணன் புத்தகங்கள் என் தம்பி வாங்கி இருக்கிறார். ஒரு மூன்று மாதத்திற்கு பொழுது போகும்.

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு போனோம். சின்னத்திரை நடிகையும் பாடகியுமான அனுராதா கிருஷ்ணமூர்த்தி என்பவரை பார்த்தோம். டிவியில் வருவதை விட மிக இளமையாக இருந்தார். சிவாஜி சார் மகன் ராம்குமாரையும் பார்த்தோம். நேரில் அவ்ளோவா குண்டாக இல்லை.
அகநாழிகை ஸ்டாலில் மணிஜியை பார்த்தேன்.பேசினேன். இன்னும் சிலரை பார்த்த மாதிரி இருந்துச்சு.ஆனால் பேசலை.

ஒரு மிகப்பெரிய கலரிங் புக் என் தம்பியின் மகனுக்கு வாங்கினேன். விலை 50 ரூபாய் மட்டுமே. சின்னவன் சித்தார்த் அத்தை இதுக்கு கலர் போட்டா என் கையே வலிச்சுடும்னு சொல்லிட்டான். பெரிசு விஷால் கலர் போட ஆரம்பிச்சு இருக்கு. இனிமேல் என்கிட்ட கலரிங் புக் கேக்கவே மாட்டார்கள் என நினைக்கிறேன்.




6 comments:

சீனு said...

ஏற்கனவே ஒருமுறை சென்று வந்துவிட்டேன்... மீண்டும் ஒருமுறை செல்ல வேண்டும்

ADHI VENKAT said...

நீங்க கொடுத்து வெச்சவங்க தான்... சென்னையில் இருக்கீங்களே...:)))

இன்று எனது பக்கத்தில்.

http://kovai2delhi.blogspot.in/2014/01/blog-post_16.html

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனு

அமுதா கிருஷ்ணா said...

சென்னை பல வகைகளில் வசதிதான் ஆதி வெங்கட்...

பால கணேஷ் said...

உங்க பேரு அமுதா, தங்கை பேரு குமுதாவா? ரசனையானவங்க போல உங்க பெற்றோர்...! வா.மணிகண்டனின் புத்தகத்தில் என் பங்களிப்பும் இருப்பதால், அதை நீங்க வாங்கினதுல ரொம்ப சந்தோஷம்! நான் அடுத்த முறை பு.க. போறப்ப குதிரைக்காரன் வாங்கலாம்னு இருக்கேன். அழகான பகிர்வுக்கு நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு..

அடுத்த முறையாவது புத்தக சந்தை அப்ப சென்னைக்கு வரணும்... பார்க்கலாம்!