Monday, July 02, 2012

தயிருக்கு லீவ் லெட்டர்..


விஷால்  சாப்பிட தயிர் சாதம் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லி விடுவான்.தயிர் சாப்பிட்டால் அவனுக்கு வாந்தி வரும்.எனவே,சின்னதில் இருந்தே அதற்காக கட்டாய படுத்தவில்லை.தயிரின் வாசமே அவனுக்கு பிடிக்காது.போன வருடம்  பஸ்ஸில் வரும் மிஸ் கிட்ட  தயிர் அவனுக்கு ஆகாது எனவே ஸ்கூலில் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.எனவே, தயிர் பற்றி ஒன்றும் அவனிடம் கேட்பது இல்லை.விடுமுறை நாட்களில் வீட்டிலும் தயிர் சாப்பிடுவதில்லை.

இந்த வருடம் ஸ்கூல் போக ஆரம்பித்ததில் இருந்து மதியம் தயிர் சாதம் இவனுக்கும் தருவார்கள் போல.தர வேண்டாம் என ஸ்கூல் பஸ்ஸில் வரும் டீச்சரிடம் சொன்ன போது விஷாலுக்கு தயிர் அலர்ஜி என்று ஒரு லெட்டர் எழுதி தர சொன்னார்கள்.நானும் லெட்டர் கொடுக்க மறந்து மறந்து போனேன். வெள்ளியன்று ஸ்கூலில் இருந்து வந்ததும் விஷால் கேட்டது..மம்மி நீங்க எப்ப கர்ட் ரைஸிற்கு லீவ் லெட்டர் எழுதி தர போறீங்க??? ஆஹா தயிருக்கு லீவ் லெட்டரா? எப்படி எழுதுவது.ஹெல்ப் ப்ளீஸ்.



7 comments:

CS. Mohan Kumar said...

Chinnavar enna standard padikkiraar?

pudugaithendral said...

தயிர் உடம்புக்கு நல்லாதாச்சே!!!

ஆஷிஷிற்கு ஆரம்பத்தில் பால் அலர்ஜி இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல சரியாகிவிட்டது. ஸ்கூலில் வேண்டுமானால் லீவ் லெட்டர் கொடுத்துவிடுங்கள்.

வீட்டில் இளந்தோச்சலாக காலையில் தோயவைத்து மதியம், மதியம் தோயவைத்து இரவு என கொஞ்சம் கொஞ்சம் கொடுத்து பாருங்கள்.

லாக்டபசில் ஒவ்வாமை இருக்கான்னு டாக்டரிடம் எதுக்கும் செக் செஞ்சீங்களா??

அமுதா கிருஷ்ணா said...

சின்னவர் இரண்டாப்பு படிக்கிறார். என் தம்பி மகன் மோகன் குமார்

அமுதா கிருஷ்ணா said...

புதுகைத் தென்றல் இது எங்க வீட்டில் பரம்பரையாக வரும் ஒரு ஒவ்வாமை.என் தாத்தா சாப்பிட மாட்டார். எனவே வீட்டிற்கு ஒரு பேரப்பிள்ளை சாப்பிடுவதில்லை!!!!

குறையொன்றுமில்லை. said...

என் பேரக்குழந்தைகளில் இருவர் தயிர் சாப்பிடமாட்டாங்க. ஆரம்பத்திலேந்தே பிடிக்காமப்போச்சு. நாங்களும் பிடிக்காததை கட்டாயப்படுத்தவேண்டாம்னு விட்டுட்டோம்.

சாந்தி மாரியப்பன் said...

நீங்க சொன்ன மாதிரி சிலருக்கு பரம்பரையாவே தயிர் பிடிக்காதுதான்.. லீவு லெட்டர் கொடுத்துருங்க :-))

கோமதி அரசு said...

மம்மி நீங்க எப்ப கர்ட் ரைஸிற்கு லீவ் லெட்டர் எழுதி தர போறீங்க??? ஆஹா தயிருக்கு லீவ் லெட்டரா? //

மழலை மொழி அழகு.
ஒத்துக் கொள்ளவில்லை என்றால் தயிருக்கு விடுமுறை கடிதம் கொடுத்து விட வேண்டியது தான்.