Wednesday, July 25, 2012

வெரைட்டி (ஜூலை 2012)

தெரிந்த பெண்ணின் ஒரு மாத பெண் குழந்தையினை பார்க்க போனோம்.ஓடி விளையாடி கொண்டிருந்த 3 வயது மூத்த ஆண் குழந்தையினை பற்றி பேசி கொண்டு இருந்தோம். ஸ்கூல் அட்மிஷன் சாருக்கு வாங்கியாச்சா என்று கேட்டேன். பாப்பாக்கு அட்மிஷன் கிடைச்சிருச்சு. பையனுக்கு தான் ஜூனில் திரும்ப வர சொல்லி இருக்கிறார்கள் என்றார்.நான் ஜெர்க்காகி இப்போதானா ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்தீங்க என்று மனசுக்குள் நினைத்து கொண்டே என்னது பாப்பாக்கு அட்மிஷனாஆஆஆஆஆ??

 பையனுக்கு ஸ்கூல் அட்மிஷனிற்கு 2012 ஜனவரியில் சிஷ்யா (அடையாறு) போனார்களாம். யாராவது சேராமல் இருந்தால் ஜூனில் பையனுக்கு அட்மிஷன் தரோம். இப்போ உங்க வயிற்றில் இருந்த குழந்தைக்கு வேணா அட்மிஷன் தரோம் என்று சொல்லி இருக்கிறார்கள். வயிற்றில் இருந்த குழந்தைக்கு 2015 ஜூனில் ஸ்கூல் சேர்க்க அட்மிஷன் வாங்கி வந்து இருக்காங்க. அட தேவுடா!! ஃபீஸெல்லாம் வாங்கலையாம். பிழைக்க தெரியாத ஸ்கூல் நிர்வாகமோ?? 1000 ரூபாய் மட்டும் கட்டி விட்டு ஃபோன் நம்பர் கொடுத்து ரிஜிஸ்டர் செய்து வந்தார்களாம்.

இளையராஜா பொண்டாட்டி தேவை என்ற பார்த்திபன் படத்திற்கு போட்ட பாடல் தான் வசந்த் கேளடி கண்மணி என்ற படத்தில் இடம் பெற்ற ”நீ பாதி நான் பாதி கண்ணே”என்ற பாடலாம். வசந்த் மிக அருமையாக படமாக்கி இருப்பார்.இளையராஜாவின் NOthing But Wind என்ற இசைத்தொகுப்பிற்காக போடப் பட்ட மியூசிக் தான் ”வளையோசை கலகலவென” என்ற கமலின் சத்யா படப்பாடலாம். ரேடியோ மிர்ச்சியில் செந்தில் சொன்ன நியூஸ் இது. இன்னும் நிறைய பாடல்கள் பற்றி சொன்னார். மறந்துடுச்சு.

 கரூரில் பெட்ஷீட்,தலையணை உறை என்று இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை எனக்கும் என் சொந்தக்களுக்கும் வாங்கி அங்கிருந்தே லாரியில் பார்சல் போட்டு விட்டு வந்து விடுவேன். வீட்டில் அனைவரும் வந்து பங்கிட்டு பிரித்து கொள்வோம். எப்பவும் இல்லாத அளவில் இந்த முறை அங்கே விலையேற்றம்.

போன மாதம் தன் இஞ்சினியரிங் படிப்பை முடித்த என் ஃப்ரெண்ட் ஜெயாவின் பெண் வைஷ்ணவி ஏர் ஃபோர்சில் பைலட் வேலைக்கு தேர்வாகி உள்ளார். 5000 பேர் சென்னையில் எழுதிய தேர்வில் 300 பேர் செலக்ட் செய்யப்பட்டு மைசூர் அழைக்கப்பட்டு, முதல் நாளில் 300 பேர் 30 நபர்களாகி அடுத்த 5 நாட்களில் அது 7 நபர்களாக ஆஃபிசர் ரேங்கிற்கு குறைக்க பட்டு...கடைசி நாளில் அந்த 7 பேரில் 3 பேர் மட்டும் பைலட் வேலைக்கு தேர்ச்சி பெற்று உள்ளார்கள். ஹைதையில் ஒன்றரை வருடம் பயிற்சி. பெண்ணின் தந்தை ஆர்மியில் COLONEL ரேங்கில் இருக்கிறார்.

14 comments:

CS. Mohan Kumar said...

//வயிற்றில் இருந்த குழந்தைக்கு 2015 ஜூனில் ஸ்கூல் சேர்க்க அட்மிஷன் வாங்கி வந்து இருக்காங்க//

என்னாங்க இது ! என்ன நடக்குது நாட்டுல ? சிரிக்கிறதா அழுவறதான்னு தெரியலை

பைலட் வைஷ்ணவிக்கு வாழ்த்துகள் சொல்லிடுங்க

குறையொன்றுமில்லை. said...

என்னது வயிற்றில் உள்ள குழந்தைக்கு அட்மிஷனா? காலம் போர போக்கைப்பாத்தா வேடிக்கையான்னா இருக்கு.

ஹுஸைனம்மா said...

கதையில், படத்துல ஜோக்காத்தான் சொல்லிட்டிருக்காங்கன்னு நினைச்சேன்!! நிசமாவே நடக்குதா இப்பிடிலாம்!! அடக் கடவுளே!!

//கரூரில் பெட்ஷீட்,தலையணை உறை ... லாரியில் பார்சல்//

அவ்வ்வ்வ்.. என்னதான் இரண்டு வருஷத்துக்குன்னாலும், ஒரு லாரி லோடு அளவுங்கிறது ஓவரா இருக்கே??!! சரி, சரி, அடுத்த வாட்டி எனக்கும் சேத்து வாங்கிடுங்க!! :-))))

sathishsangkavi.blogspot.com said...

வயிற்றில் உள்ள குழந்தைக்கு அட்மிஷன்...

நல்ல வியாபார தந்திரம்....

அமுதா கிருஷ்ணா said...

வைஷ்ணவிக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுறேன் மோகன் குமார்.

இராஜராஜேஸ்வரி said...

ஏர் ஃபோர்சில் பைலட் வேலைக்கு தேர்வாகி உள்ள பெண்ணுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் !

அமுதா கிருஷ்ணா said...

ஹூஸைனம்மாஆஆஆஆஆ...ஒரு பார்சல் தான் ...லாரியில் வந்த மொத்த லோடும் எங்களுக்கு இல்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா.. நல்லா இருங்குங்க...
உங்கள் தளத்திற்கு முதல் வருகை என்று நினைக்கிறேன்...

நன்றி...
திண்டுக்கல் தனபாலன்

சாந்தி மாரியப்பன் said...

//வயிற்றில் இருந்த குழந்தைக்கு 2015 ஜூனில் ஸ்கூல் சேர்க்க அட்மிஷன் வாங்கி வந்து இருக்காங்க//

ஆஹா!! கதைகள்லயும் ஜோக்குலயும் வந்ததெல்லாம் இப்போ நிஜமா நடக்குதா.. ஆனாலும் ரொம்பவே ஓவருதான் இதெல்லாம் :-))

பாலா said...

கூடிய விரைவில் திருமணம் நிச்சயித்த உடனேயே அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிவிடும் பாருங்கள்

வெங்கட் நாகராஜ் said...

என்னது வயிற்றில் இருந்த குழந்தைக்கு அட்மிஷனா? அநியாயமா இருக்கே..

போகப்போக பொறக்கும் குழந்தைக்கு மட்டுமல்ல, அக்குழந்தைக்கு பிறக்கும் குழந்தைக்கும் அட்மிஷன் போட்டாலும் போடுவாங்க போல...

கோவை நேரம் said...

அட்மிசன்....?விளங்கிடும்...?

வாழ்த்துகள்...பறக்க போகும் அம்மணிக்கு....

Admin said...

வணக்கம் சகோதரி பதிவர் சந்திப்பு தேதி மாற்றமாயிருக்கிறது. 19 அல்ல 26.தாங்கள் கலந்து கொள்வதாக இருந்தால் உறுதி படுத்துங்கள்..

ஹுஸைனம்மா said...

இந்த வார வலைப்பூவரசி நீங்க! வாழ்த்துகள்!!