Wednesday, June 20, 2012

வீடு மாத்திக்கலாமா

டைட்டானிக் பொண்ணு நடிச்ச படம்னா ஆவென்று படம் பார்க்க உட்கார்ந்து விடுவேன். அப்படி சமீபத்தில் HBO-வில் உட்கார்ந்த படம் தான் THE HOLIDAY. காதலில் தோற்று போன இரண்டு பெண்கள் தங்கள் வீட்டினை ஹாலிடேயில் தங்குவதற்காக எக்சேஞ்ச் செய்து கொள்கிறார்கள். டைட்டானிக் பொண்ணு KateWinslet(ஐரிஷ்) Cameron Diaz (அமெண்டா) இருவரும் ஒரு நாள் வாழ்க்கையே வெறுத்து போய் Home exchange website -ல் சந்தித்து கொள்கிறார்கள். ஐரிஷ் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் அமெண்டாவின் மிக பெரிய வீட்டிற்கும், அமெண்டா ஐரிஷின் இங்கிலாந்தின் குளிர் பிரதேசத்தில் இருக்கும் ஒரு சிறிய வீட்டிற்கும் ஹாலிடேவிற்கு ஷிஃப்ட் ஆகிறார்கள். மனம் வெறுத்த நிலையில் இருக்கும் இருவருக்கும் ரொமான்ஸ் தேவை படுகிறது. அமெண்டாவிற்கு ஐரிஷின் சகோதரரருடனும், ஐரிஷிற்கு அமெண்டாவின் பக்கத்து வீட்டு பையனுடனும் ரொமான்ஸ் ஆகிறது. இங்கு நான் சொல்ல வந்தது அதை பற்றி அல்ல!!! Home Exchage என்று நிஜமாவே ஒரு வெப்சைட் இருக்கிறதா என்று பார்த்ததில் ஆஹா இருக்கிறது. இது சம்பந்தமாக ஒரு ப்ளாக்இருக்கிறது.

சரி இந்தியாவில் இருக்கிறதா என்று பார்த்ததில் அடடா இருக்குதே..

நாமும் காஷ்மீர்,கோவா,ஷில்லாங்,கேரளா போன்ற இன்னும் பிற இடங்களுக்கு லீவில் வீட்டை மாத்திக் கொண்டு போனால் ஆஹா நல்லாதான் இருக்கும். ஆனால், நான் இருக்கும் சென்னைக்கு யார் அப்படி விரும்பி வீடு மாத்தி வர போகிறார்கள்.இவையெல்லாம் படத்தில் மட்டுமே சாத்தியம் இல்லையா???


10 comments:

ஹுஸைனம்மா said...

இது நல்லா கான்ஸெப்டா இருக்கே!! நல்லா அழுக்கா ஆன வீட்டை, வீட்டைச் சுத்தமா வச்சிருக்கவங்களோட எக்ஸ்சேஞ் பண்ணிகிட்டா, வீட்டைச் சுத்தம் பண்ணி தந்துவாங்கள்ல? அதேமாதிரி, அவங்க வீட்டையும் நாம ச்சும்மா லேஸா க்ளீன் பண்ணிகிட்டாப் போச்சு!! :-))))

pudugaithendral said...

ம்ம்ம்... சென்னைக்குன்னா நான் வரலை. வேற எங்கயாவதுனா நான் ரெடி. :))

pudugaithendral said...

இது நல்லா கான்ஸெப்டா இருக்கே!! நல்லா அழுக்கா ஆன வீட்டை, வீட்டைச் சுத்தமா வச்சிருக்கவங்களோட எக்ஸ்சேஞ் பண்ணிகிட்டா, வீட்டைச் சுத்தம் பண்ணி தந்துவாங்கள்ல? அதேமாதிரி, அவங்க வீட்டையும் நாம ச்சும்மா லேஸா க்ளீன் பண்ணிகிட்டாப் போச்சு!! :-))))//

ம்ம்முடியலை ஹுசைனம்மா

அமுதா கிருஷ்ணா said...

ஹூஸைனம்மா என்ன ஒரு வில்லத்தனம்...

அமுதா கிருஷ்ணா said...

யெஸ் சென்னை என்றால் யாரும் வர மாட்டார்கள் என்பதே என் கவலை புதுகைத் தென்றல்.

CS. Mohan Kumar said...

இதுக்குன்னு ஒரு வெப்சைட் வேற இருக்கா? சர்த்தான்

ஹுசைனம்மா இன்னிக்கு செம பார்மில் இருக்காங்க

வெங்கட் நாகராஜ் said...

ஐ... நல்ல ஐடியாவா இருக்கே.... :)

தில்லில இப்ப அடிக்கிற 45 டிகிரி வெயிலுக்கு யாரும் வர ரெடியா இருப்பாங்களா? :(

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம், மோகன் குமார்.நாம் வீட்டினை மாத்தி கொள்ள முடியாது.நாம் இருவரும் சென்னை..

அமுதா கிருஷ்ணா said...

டில்லின்னா நவம்பரிலிருந்து பிப்ரவரி வரை மாற்றலமே.அப்ப இங்கேயும் நல்லாயிருக்கும் வெங்கட் நாகராஜ்

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா!!.. இப்படி வேற கிளம்பியிருக்காங்களா!!

ஆனா, கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு விஷயம் இங்கே ஒரு ஷோவுல நடந்தது. காமெடி சர்க்கஸ்ன்னு ஒரு ஷோ இங்கே ரொம்ப பிரபலம். அதில் பங்கேற்கும் ஆர்த்தியும் ஹிந்தி சினிமாவின் ராக்கி சாவந்தும் அம்மாக்களை மாத்திக்கிட்டாங்க ஷோவுக்காக. அதாவது 10 நாட்களுக்கு இவங்க அவங்க வீட்ல தங்கணும். அவங்களோட அம்மாவை தன்னோட அம்மாவா நடத்தணும். 10 நாட்களுக்கு அம்மாக்களும் மகள்களும் அடிச்ச லூட்டி இருக்கே,.. சிரிச்சு சிரிச்சு வயித்து வலியே வந்துருச்சு ;-)))

@ஹுஸைனம்மா... அது எதுக்குங்க லேசா க்ளீன் செஞ்சுக்கிட்டு?.. நாமெல்லாம் நம்மூட்ல எப்டி இருக்கோமோ அப்டித்தான் அடுத்த வீட்டையும் அழுக்கா வெச்சுக்கணும். வழக்கம்ன்னு இருந்தா அதை மாத்திக்கக்கூடாது :-))))))))))