Tuesday, August 25, 2009

நாளைக்கு ஸ்கூல் போகணும் திட்டு வாங்க!!!! என்ன சொல்லி ஒப்பேத்த ஐடியா கொடுங்களேன்!!!

நாளைக்கு என் பையன் (+2 மேத்ஸ்,பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, கம்யூட்டர்) படிக்கும் ஸ்கூலில் பையனை பற்றி என்னிடம் குறை கூற என்னை வர சொல்லி இப்பொழுது ஃபோன் செய்தார்கள். அவன் இஞ்சினியரிங் சேர போவதில்லை.
அவர் அவர் capacity படிதான் படிக்க முடியும்.50% வாங்கினாலும் இப்பொழுது இஞ்சினியர் சீட் கூவி கூவி விற்கிறார்கள்.ஆனாலும், அவன் இஞ்சினியரிங் படிக்க போவதில்லை என்று சொல்லிவிட்டு வந்து விடட்டுமா?
ஏன் இந்த ஃப்ர்ஸ்ட் க்ரூப் மோகம் என்பவர்களுக்கு, ஹையர் ஸ்டடீஸ்க்கு இது நல்லது என்பதால் இதில் சேர்ந்தான். அப்புறம் ஏன் இந்த ஸ்கூல் சேர்த்தாய் என்பவர்களுக்கு, இந்த ஸ்கூல் ப்ரின்சிபல் டூயூஷன் சேர்க்க கூடாது என்பதில் மிகவும் கறார். அதனால் சேர்ந்தான். ஆனால், எப்ப இந்த வருடம் முடியும் என்று உள்ளது. ஒரு முறை மேத்ஸ் என்றால் இன்னொரு முறை பிஸிக்ஸ் என்று
ஃபெயில் ஆகி விடுகிறான். ஆனால் எப்பவும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வில் 65 லிருந்து 70% வாங்கி விடுவான்.எனவே நான் அலட்டிக் கொள்வதில்லை. மாத பரிட்சையில் ஃபெயில்.தலை முடியில் ஃப்ங்க் விடுகிறானாம். கொஞ்சமாய் தாடி இருக்கிறதாம். நாளைக்கு ஸ்கூல் போகணும் என்றாலே எனக்குப் பிடிக்கவில்லை. என்ன சொல்லி வரட்டும். கஷ்டமடா இந்த +2. அவன் அப்பாவோ மார்ச்சில் மூன்று சப்ஜெக்டும், ஃப்யில் ஆகி ஜூனில் மூன்று பேப்பரும் எழுது என்று கூறும் நல்ல மனசுக்காரர்.இப்படி ஸ்கூலுக்கு அலைவது எல்லாம் நான் தான். உடனடி உதவி தேவை.

3 comments:

Thamira said...

ஓகே மேடம், ஓகே மேடம் என்று மண்டையை ஆட்டிவிட்டு வந்துவிடுவது நலம். ஆனால் இந்தக்காதில் விழுந்த விஷயங்களை அந்தக்காதில் விட்டுவிடலாம்.!

அமுதா கிருஷ்ணா said...

நல்ல ஐடியா ஆதி சார்...

சுந்தரா said...

பிள்ளைங்கதான் ஸ்கூல் போகப் பயப்படுவாங்கன்னு பார்த்தா, இப்ப,அம்மாக்களும் பயப்படவேண்டியிருக்குது.

சிலசமயங்களில் நானும் இதையே அனுபவித்திருக்கிறேன் என் மகனால் :) அவருக்கு மொழிப்பாடங்களே ஆகாது.(ஹிந்தி,அரபிக்)

அநேகமா,இந்நேரம்திட்டெல்லாம் வாங்கி மறந்தும்போயிருப்பீங்க.

இனிமே,இப்படியொரு சந்தர்ப்பம்(வராம இருக்கட்டும்) வந்தா, திட்டு வாங்கும்போது மகனையும் பக்கத்தில வச்சிக்கோங்க. துணைக்குத் துணையாகவும் இருக்கும், அம்மாவோட சங்கடத்தை அவரும் புரிஞ்சுகிட்டமாதிரியும் இருக்கும்.