Tuesday, January 18, 2011

என்ன புரட்சி செய்யலாம்?

ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி போய் புத்தகங்கள் வாங்குவது என்பது சென்னை மக்களுக்கு எழுதபடாத சட்டமாகி விட்டது. நாங்கள் வாழ்வது தாம்பரம் என்றாலும் நாங்களும் ரவுடி தான்.கீழே உள்ள புத்தகங்கள் என் கணவர் வாங்கி வந்தது. 

                      இந்த புத்தகங்கள் பெரிய மகன் நகுல் வாங்கியது



போனவருடம் ராஜீவ்காந்தி கொலைவழக்கு புத்தகம் தான் தமிழில் முதல் முதலாக நகுல் படித்த புத்தகம். ஸ்கூலில் இங்கிலீஷ்,ஹிந்தி, சமஸ்கிருதம் படித்தான்.தமிழ் என்னிடம் கற்று கொண்டான்.
அவராகவே புத்தக கண்காட்சிக்கு போய் கிழக்கு பதிப்பகத்தை வீட்டிற்கே கொண்டு வந்து விட்டான்.


கீழே உள்ள புத்தகங்கள் சின்னவன் ரிஷி வாங்கியது.சாருக்கு தமிழ் தகராறு.எல்லா வருடமும் போல இந்த வருடமும், தமிழ் கத்துக்கணும் என்று சபதம் போட்டு இருக்கிறான்.இந்த வருடமாவது நிறைவேறுமா?

நானும் தங்கையும் உயிர்மை பதிப்பகம் போனோம்.ஜீரோ டிகிரி பார்த்தேன்.வாங்கும் தைரியம் வரவில்லை.ஓசியில் கிடைத்தால் படித்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.என் தங்கை உலோகம்,நள்ளிரவில் சுதந்திரம்,சுஜாதா சிறுகதைகள் தொகுப்பு, இரண்டாம் இடம் போன்ற புத்தகங்களை வாங்கினார்.அடுத்த மாதம் அந்த புத்தகங்களை ஓசியில் படிக்க வேண்டும்.கமல் பற்றி புத்தகம் கிழக்கில் இருந்தது. நான் அதை சும்மா புரட்டிய போது நகுல், அம்மா அது புரியாது என்றான். டேய் அவர் பேசினால் தான் புரியாது. அதுவுமில்லாமல் இதை எழுதியது கமல் இல்லை என்ற போது பக்கத்தில் இருந்த கிழக்கு பணியாளர் சிரித்து விட்டார். 

இவை அல்லாமல் என் கணவர் SQL server reporting service,SQL AND Relational theory, அப்படி இப்படி என்று எனக்கு புரியாத SQL பற்றிய 5 புத்தகங்களை வாங்கினார்.ஏன்ப்பா இத்தனை புத்தகங்கள் என்று நான் அலுத்துக் கொண்ட போது பத்தாயிரம் ரூபாய் சம்பளம் போதும்னா சொல்லு புது கம்ப்யூட்டர் புத்தகங்கள் வாங்குவதை இப்பவே நிறுத்திக் கொள்கிறேன் என்றார். அய்யா சாமி அந்த சம்பளம் வெங்காயம் வாங்க கூட பத்தாதே, சார் எத்தனை SQL வேண்டுமானாலும் வாங்குங்க அட்டை போட்டு பத்திரமாய் செல்ஃபில் அடுக்கி வைக்கிறேன் என்று சொல்லிட்டு ஓடி விட்டேன்.

இடிஅமீன்,காஷ்மீர்,சுபாஷ்சந்திரபோஸ், ஃபிடல் காஸ்ட்ரோ இந்த வாரம் படித்து முடித்தேன்.அதன் பலனாக நானும் எதாவது புரட்சி செய்யலாமா என்ற யோசனையில் இருக்கிறேன். என்ன வாழ்க்கை இது? 
கிழக்கு பதிப்பகம் குறைந்த விலையில் அருமையான ஜூஸ் கொடுத்து இருக்கிறது.




24 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு சகோ. பல புத்தகங்கள் வாங்கி இருக்கீங்க போல. ஒவ்வொண்ணா படிச்சுட்டு எப்படி இருந்ததுன்னு எழுதுங்க!

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
http://venkatnagaraj.blogspot.com/2011/01/blog-post_17.html

Prabu M said...

நல்ல தொகுப்புங்க :)
கமல் ஜோக்கை ரசித்தேன்.. :))

ஜோதிஜி said...

நானும் தங்கையும் உயிர்மை பதிப்பகம் போனோம்.ஜீரோ டிகிரி பார்த்தேன்.வாங்கும் தைரியம் வரவில்லை.ஓசியில் கிடைத்தால் படித்துக் கொள்ளலாம் என்று இருக்கிறே..............

சாரு இதை படித்தால் என்ன நினைப்பார்?

Ram said...

இதில் அர்த்தமுள்ள இந்துமதம் நல்ல புத்தகம்.. ஏற்கனவே படித்துவிட்டேன்... புத்தகத்தில் நம்ம நகுல் பக்கம் நான்.. இடியமீன்,மர்மங்களின் பரமபிதா போன்ற புத்தகங்கள் எனது டேபிளில் அடுத்த படிக்க வேண்டிய வரிசையை நிரப்பிகொண்டிருக்கின்றன.. பிரபாகர், ஃபிடல்,சே,பெரியார் பற்றி நாராம்சமாக, அக்குவேர் ஆணிவேறாக ஏற்கனவே பிரிச்சு மேஞ்சிட்டன்.. சுபாஷ்ம் அப்படிதான் இருந்தாலும் அந்த தலைபு என்னை வெகுவாகவே கவர்ந்தது.. நான் பெரிதும் பாரதி மற்றும் கிழக்கு பதிப்பகத்தையே விரும்புவேன்.. இம்முறை கிழக்கிலே அதிகமாக அறிவை பெருக்கினேன்.. SQl பற்றி நான் சொல்வதுக்கு ஒண்ணுமில்லை.. படித்து ரசித்து பின்பு பிடிக்காமல் போனது.. இதில் ரிஷி என்ன விட்டு விலகியே தெரியிறாப்புல.. அவருக்கு சம்பந்தபட்ட மாதிரி எனக்கு புடிச்சது charlie and chocalate factory தான்.. காஷ்மீர் புத்தகம் நான் வாங்க வேண்டி மறந்தது.. நகுலுக்கு எனது பெருத்த வாழ்த்துக்கள்.. மனதில் வேறு எந்த ஒரு சஞ்சலமும் இல்லாமல் படிக்க சொல்லுங்கள்..

// நாங்கள் வாழ்வது தாம்பரம் என்றாலும் நாங்களும் ரவுடி தான்.//

அப்ப நானும் 'ரௌ'டி தான்.. நானும் தாம்பரம் பக்கம் தான்.. சிட்லபாக்கம்..

Ram said...

புத்தகம் என்றவுடன் அதிகமாக எழுதிவிட்டேன்.. கடிந்துகொள்ள வேண்டாம்...

Chitra said...

Nice. :-)

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் வெங்கட் படிக்கணும்..


தாங்ஸ் பிரபு எம்.

ஜோதிஜி ஓசியில் படித்தால் உருப்படமாட்டாங்கன்னு நினைப்பாரோ..

அமுதா கிருஷ்ணா said...

நன்றி ஆயிஷா

அமுதா கிருஷ்ணா said...

நன்றி தம்பி கூர்மதியன்.காஷ்மீர் படித்து விட்டு காஷ்மீர் தனி நாடாக இருந்து இருக்கலாமே என்று தோன்றியது.உங்களுக்கு சிட்லபாக்கமா குட்.

மேவி... said...

தாம்பரத்துல இருக்குற நீங்களே ரௌடின்ன .... நான் பெருங்களத்தூர்ல இருக்குறேன் ...நான் பெரிய ரௌடி.

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா வாங்க ரவுடி டம்பி மேவீ.

தம்பி கூர்மதியன் ரவுடி கும்பல் பெருகி போச்சு.யாரை தலைவராக்கலாம்.

Ram said...

@டம்பி மேவி:பெருங்களத்தூர்னா அந்த நாலடி ரோட்டுல கூட்டமா நின்ன இடத்த உட்டு நகராம இருப்பாங்களே தட் க்ராமமா.??? ஓ.. ஹா ஹா..

@அமுதா: நீங்களே இருங்க.. தலைவர் வாழ்க.. தலைவர் வாழ்க.. ஃபர்ஸ்ட் யார போட்டு தள்ளலாம்.???

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா நான் புரட்சின்னு சொன்னதை தலைவராகி போட்டு தள்ளறதுன்னு நினைச்சுட்டீங்களா தம்பி கூர்மதியான்.

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி ராம்ஜி.

Ram said...

@அமுதா: இன்னும் நம்மவர் பல புரட்சினா என்னன்னு புரிஞ்சிகலையா.??? புரட்சிக்கறத்துக்காக போட்டு தள்ளலாம்னு சொல்லல.. ரௌடிங்கறத்தால தான் சொன்னன்.. ரௌடி, புரட்சி போத் ஆர் அப்டு 2 எக்ஸ்டன்ட்.. தமிழை இங்ஃகிலிசில் எழுதுவதை விட்டுபுட்டு இங்கிலீசை தமிழில் எழுதுவோர் சங்கம்..

ஆமினா said...

எவ்வளவு புத்தகம்???

நானும் ஓசியில் கிடைப்பதை மட்டுமே வாங்கி படிக்கும் கேஸ் ;)

அமுதா கிருஷ்ணா said...

நன்றி சித்ரா..

என் கணவர் மாதிரியே என் பசங்களும் இருக்காங்க புத்தகம் வாங்கி தள்ளுவதில்.வீட்டில் என் கட்சிக்கு யாரும் இல்லை ஆமினா..

அமுதா கிருஷ்ணா said...

நானும் அந்த சங்க உறுப்பினர் தம்பி கூர்மதியான்.

Nagasubramanian said...

அர்த்தமுள்ள இந்து மதம் அருமையான புத்தகம். குறிப்பாக அதை கடைசி பாகம் (பாகம் 11 ). கமல பத்தி சொன்னது கிச்சி முச்சி:) எல்லாவற்றுக்கும் மேல உங்க குடும்பத்துல எல்லோருக்கும் வாசிப்பு பழக்கம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

Dubukku said...

ஆஹா பெரிய ரவுடியா இருப்பீங்க போல :)))
//அடுத்த மாதம் அந்த புத்தகங்களை ஓசியில் படிக்க வேண்டும்//

நான் சொல்றேன் அந்த புத்தங்கங்கள் மிக நன்றாக இருக்கும் பாருங்க..ஓசி ருசியே தனி :)

கமல் ஜோக் :))))

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நாகசுப்ரமணியன்.

வருகைக்கு நன்றி டுபுக்கு.ஆமாம் எப்பவும் ஓசியே ருசிதான்.

Thamira said...

அம்மா அது புரியாது என்றான். டேய் அவர் பேசினால் தான் புரியாது. அதுவுமில்லாமல் இதை எழுதியது கமல் இல்லை.//

:-)))

அமுதா கிருஷ்ணா said...

நிஜம் தானே ஆதி.

சி.பி.செந்தில்குமார் said...

பரவால்லியே/.. சென்னை புத்தக கண்காட்சில வாங்குன புக்சை வெச்சு ஒரு பதிவு போட்டுட்டீங்களே

குட்